நயினாதீவு 2ஆம் வட்டாரத்தில் கிழக்கு நோக்கிய சிறிய கோயிலாக இக்கோயில் விளங்குகின்றது. இக்கோயிலை வெளியில் நாயன் கோயில் என்றும் வெளியில் நாகம்மாள் கோயில் என்றும் அழைப்பர். இந்திரன் கோயில் என்றும் வழங்குவர். இந்திரனிடமுள்ள குலிசம் (வச்சிரம்) இக்கோயில் வழிபாட்டிற்குரிய புனிதப் பொருளாக விளங்குகின்றது. வருடம் தோறும் பொங்கல் வழிபாடு நடைபெறுகின்றது. தற்போது இக்கோயில் புதிதாக அமைக்கப்பட்டு நித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.