நயினாதீவின் 8ஆம் வட்டாரத்தில் மலையில் புலத்தில் காவல் தெய்வமாக கிழக்கு நோக்கியதாக இக்கோயில் விளங்குகின்றது. கருவறைக்குள் வேல் பிரதிட்டை செய்யபடபட்டுள்ளது. இக்கோயிலை மலையில் நாயனார் எனவும் வழங்குவர். இக்கோயிலில் ஐயப்ப சுவாமிக்குத் தனியான சந்நிதி உண்டு. ஐயப்ப சுவாமி வழிபாடு இக்கோவிலில் சிறப்புற நடைபெற்று வருகின்றது. ஆலும் பூவரசும் தலவிருட்சங்களாக உள்ளன.