இந்தியாவில் கீழ்க்கரைப் பகுதியிலிருந்து 1915 ஆம் ஆண்டளவில் நயினாதீவுக்கு வருகைதந்த முஸ்லீம் மக்கள் தமது வணக்கத்திற்குரிய தலமாக நயினாதீவு ஆறாம் வட்டாரத்தில் கிழக்கு கடற்கரை அருகில் ஒரு சிறிய பள்ளிவாசலை அமைத்தனர். இப்போதிருக்கும் பள்ளிவாசல் 1919 இல் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் 1923 இல் அமைக்கப்பட்ட அம்மா பள்ளிவாசல் காணப்படுகிறது. இலங்கையில் இஸ்லாமியர்களுக்குரிய புனித வழிபாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.