நயினாதீவில் மானிக்கரை என்னும் காணியில கிறிஸ்தவ குருமார் தங்கியிருப்பதற்கு 1890 ஆம் ஆண்டளவில் ஒரு வீடு அமைக்கப்பட்டது. பின்னர் பள்ளிக்கூடமும் அமைக்கப்பட்டது. மடமும் வழிபாட்டுக்கென அமைக்கப்பட்டது. இதனை அமைத்தவர்கள் அமெரிக்க திருச்சபையைச் சேர்ந்த புரட்டஸ்தாந்து மதத்தினர். தென்னிந்திய திருச்சபையினர் சார்பில் நயினைதீவு 7ம் வட்டாரத்தில் மேற்குக் கடற்கரையில் சிறிய அந்தோனியார் ஆலயம் ஒன்று காணப்படுகிறது. பென்டிக்கோஸ் பிரிவினரும் தமது வணக்கத்திற்காக 7ம் வட்டாரத்தில் சிறிய ஓர் ஆலயம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.