நயினாதீவில் சிவாலயம் இல்லாமல் இருக்கின்ற போதும் சிவமூர்த்தங்களான வீரபத்திரர், வைரவர் என்போருக்கான கோயில்கள் காணப்படகின்றன.

நயினாதீவு நான்காம் வட்டாரத்திலும், ஐந்தாம் வட்டாரத்திலும், ஆறாம் வட்டாரத்திலும், ஏழாம் வட்டாரத்திலும் ஞான வைரவருக்குத் தனியான சிறு ஆலயங்கள் காணப்படுகின்றன. நயினாதீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்தினுள்ளும் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய ஞானபைரவர் ஆலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.