உலகிலுள்ள அறுபத்து நான்கு சக்திப்பீடங்களிலொன்றாகிய நாகேஸ்வரி ஆலயம்( நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்) அமையப்பெற்ற மணிபல்லவத்தில் (நயினாதீவில்) சிவத்திரு.க.இராமச்சந்திரனார் 1885ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி அவதரித்தார்.(ஐப்பசி 20ம் திகதி). இவரது தந்தையார் பெயர் உயர் திரு வைரமுத்து கதிரேசு ஆவர்.இவரது பாட்டனார் தென்னிந்தியாவிலிருந்து அம்பிகைக்கு பூசைசெய்ய அழைக்கப்பட்ட நாயனார் குடும்பத்தைச் சேந்தவர் கதிரேசு குடும்பத்துக்கு வீரபத்திரர் கோவில் சொந்தமானது. இவரது தாயார் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தர்மகத்தாவின் மகள் வள்ளியம்மையாவார்.இவர்களது குடும்பமே தெய்வ பக்தி மிகுந்ததாக விறங்கிற்று.இரவது தாயாரின் வேண்டுகோளுக்கிணங்கியே வீரபத்திரர் கோவிலில் பலி கொடுப்பது நிறுத்தப்பட்டது. தாயார் முருக பக்தியுடையவர். அவரது விருப்பத்திற்கியங்கியே அக்காலத்தில் முருகன் கோவிலையும் கட்டி வழிபட்டு வந்தனர்.இராமச்சந்திரனாருக்கு ஐந்து வயது நிரம்பியதும் இவரது தாய்மாமனான ஆசரியர் பரமலிங்கம் ஏடு தொடக்கி வைத்தார்.இவர் தனது ஆரம்ப கல்வியை தில்லையம்பல வித்தியாலயத்தில் ஆரம்பித்து எட்டாம் வகுப்புவரை அங்கு படித்து சிறந்த மாணவனாக விளங்கினார்.இவர் படித்த காலத்தில் அங்கு தலமையாசிரியராக இருந்தவர் சிட்னி சின்னத்தம்பியாவார்.இராமசந்திரர் தனது பன்னிரண்டாவது வயதிலேயே எட்டாம் வகுப்பில் திறமைச்சித்தியடைந்து ஆசியர்களது நற்சான்றிதழ்களையும் பெற்றிருந்தார்.இவரது திறமையை அறிந்த இவரது தந்தையாரின் நண்பர் வாணிபம் செட்டியர் இவரை யாழ்ப்பாணத்திலுள்ள பாரதிபாசிய வித்தியாலயத்தில் மாணவ ஆசிரியராகச்சேர்ந்தார். அதன் பின் மத்திய கல்லூரியிலும், இல்னர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.இவர் எல்லா பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்றதால் ஒவ்வொருமுறையும் இவ்விரண்டு ஆண்டாக வகுப்பேற்றம் செய்யப்பட்டார்.ஆங்கிலம் படிக்கத்தொடங்கி நாலாம் ஆண்டிலேயே கேம்பிறிச் சீனியர் வகுப்பையடைந்ததோடு ஆங்கிலத்திலும் சிறந்த மாணவனாக விளங்கினார்.
1914ம் ஆண்டு இராமச்சந்திரனார் பெற்றோருக்கும் சொல்லாமலே கொழும்பில் தொழில்நுட்பக்கல்லூரியில் புகையிரதப்பிரிவில் மாணவனாகச் சேர்ந்து பயிற்சி பெற்று அப்பகுதியிலேயே சேவையும் செய்யலானார்.புகையிரதச் சேவையில் இருக்கும் போதே ஆத்மீகம், சமூகசேவை, உலகஅரசியல் எனப் பலவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.புகையிரதத் தொழிலாளர் சங்கத்தை தொடங்கி வைத்து அதில் பணி புரிந்து புகையிரத தொழிலாளர்க்கு உதவினார்.புகையிரதப் பகுதியில் பணிபுரிந்த காலத்திலேயே சிலோன் இன்வென்றி எனும் பட்டாளப்பிரிவில் சேர்ந்து பட்டாளப்பயிற்சியும் பெற்றார்.யுத்த காலத்தில் இவரது பிரிவும் யுத்தம் செய்ய நேர்ந்தது. அதன் பின்னர்தான் இவர் தனது முதலாவது தென்னிந்திய யாத்திரையைத் தொடங்கினார். இவர் சைதாப்பேட்டையில் இருந்த காலத்தில் மோகதாஸ் காந்தியின்(மகாத்மா காந்தி) அறிமுகம் கிட்டிற்று.இங்கிலாந்தின் முதல் தொழிற்கட்சிப் பிரதமரான ராம்செமக்டொனால்டுக்கு ஐரோப்பிய மேலதிகாரிகளால் வரவேற்பு ஒழுங்கு செய்யப்பட்டபோது இலங்கை உத்தியோகத்தர் சார்பாக சொற்பொழிவாற்றுமாறு இராமச்சந்திராவுக்கு அழைப்புக்கிடைத்தது.அவர் அதில் உள்ளங்களையும் தொடுமாறு வரவேற்புரை நிகழ்த்தினார்.பின்னர் றிலிக்சஸ் டைசற்(சுநடபைழைரள னுளைளநயவ) என்ற சர்வமத சஞ்சிகையை நடாத்தினார். திண்டாமை ஒழிப்பு, சீதண எதிர்ப்பு, சிங்கள தமிழர் வேற்றுமை, சிரமதானப்பணி, கூட்டுப்பிரார்த்தனை முதலியவற்றில் கவனம் செலுத்தி உழைத்து வந்தார்.சிரமதான அமைப்புக்கு அநுராதபுரத்தில் தமக்குச்சொந்தமான 10ஏக்கர் காணியை நன்கொடையாகக் கொடுத்துதவினார். புகையிரதத் தொழிலாளர் இயக்கத்தில் 1917 – 1935 ஈடுபட்டிருந்தார். பண்ணைப்பாலம், புங்குடுதீவுப்பாலங்கள் அமைவதற்கு பெரிதும் பாடுபட்டவர் திரு இராமச்சந்திரரேயாவார். இவருக்க உதவியாளர்கள் திரு.கு.ளு.சிமித்(வடமாகாண அதிபர்), திரு.செல்லை அமரசிங்கம், திரு.மு.அம்பலவானர், திரு.சரவணமுத்துச் சாமியார் ஆகியோர்.
இராமச்சந்திரரின் முயற்சியைப் பாராட்டி டெயிலிநியுஸ், மோனிங்லீடர், இன்டிபென்டன் பத்திரிகைகள் பெரிதும் பாராட்டி எழுதின. இவர் படித்த நயினாதீவு தில்லையம்பல வித்தியாசாலையைக் கட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வந்தரான திரு.வே.சின்னக்குட்டியாரை நாடி அதனைச் செய்து முடித்தது இவருக்கு கல்வி வளர்ச்சியிலிருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.சின்னக்குட்டியாரின் இரண்டாவது மகனான தல்லையம்பலம் மரணமடைந்ததனாயே அவரின் பெயர் அந்த பாடசாலைக்கு தில்லையம்பல வித்தியாசாலை எனச்சூட்டப்பட்டது.இப்பாடசாலை பின்னர் நயினாதீவு நாகபூசனி வித்தியாலயமாக மாற்றப்பட்டது.

1924ம் ஆண்டு இராமச்சந்திரர் உத்தியோக மாற்றம் காரணமாக நாவலப்பிட்டிக்குச் சென்றார். அங்கிருந்த காலத்தில் நாவலப்பிட்டி இந்து வாலிபச்சங்கந்தினை ஆரம்பித்து அதன் நிர்வாகக்குழுவிலும் அங்கத்தவராகவும் சேவை செய்தார்.நவலப்பிட்டியல் சிறுவர்கள் கல்வி கற்க வசதியற்றிருந்தது கண்டு இவர் 12 மாவர்களைச்சேர்த்து ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை தான் பிற்காலத்தில் 1500 மாணவரைக் கொண்ட நாவலப்பிட்டி கனிஸ்ட மகாவித்தியாலயமாகவும், குமாரமன வித்தியாலமாகவும் இரு பாடசாலைகளாக உருவாயிற்று. நயினாதீவிலுள்ள மகாவித்தியாலத்திற்கும் மாணவரது கல்வி வளர்ச்சி கருதி வாசிகசாலையைக் கட்டிக்கொடுத்தார். மகாத்மாகாந்தி இலங்கை வந்த போது நாவலப்பிட்டியில் இவரது இல்லத்தில் தங்கிய பெருமையும் இவருக்கு கிடைத்தது.
1931ம் ஆண்டு கொழும்புக்கு மாற்றலாகி வெள்ளவத்தையில் தங்கியிருந்த காலத்தில் தமிழ் பிள்ளைகள் தமிழ் மொழியில் கற்பதற்கு நண்பன் எம்.எம்.குலசேகரத்தோடு சேர்ந்து இராமகிருஷ்ண மிசனுக்குக் கீழ் ஒரு பாடசாலையைக் கட்டினார்.இராமச்சந்திரனார் இக்காலத்தில் இவர் தென்னிந்தியா வட இந்தியா என அடிக்கடி தலயாத்திரை செய்தார்.இலங்கையில் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவை செய்தவர்களுள் இராமச்சந்திரர் முக்கிய இடம் பெற்றவர்.1960ம் ஆண்டில் லண்டன் டீ.டீ.ஊ யிலும், 1963ம் ஆண்டு அமெரிக்காவிலும்,1968ம் ஆண்டு ஜேர்மனியிலும், 1969ல் நோர்வேயிலும் வானொலிப்பிரச்சாரம் செய்தார்.அவர் சர்வமத சனாசன சன்மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்.இவரது பேச்சுக்களும் சொற்பொழிவுகளும் சர்வமத அனுசரணை சார்ந்ததாகவே இருக்கும்.சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதிலுமிக்க கரிசனை உள்ளவர்.
இராமச்சந்திரனாரின் முதலாவது மனைவி சின்னாச்சிப்பிள்ளை இவர் இறந்த பின் இரண்டாவது மனைவியாக சின்னாச்சிப்பிள்ளையின் தங்கை சின்னத்தங்கத்தை மணந்தார்.இவர்களிருவருக்கும் பிறந்த மூத்த பிள்ளைக்கு பாலசுப்பிரமணியம் எனப் பெயரிட்டனர். பாலசுப்பிரமணியத்தின் சாதகத்தை அக்கால நயினாதீவுசாத்திர வல்லுரரான ஐயாத்துரையிடம் இராமச்சந்திரனார் காட்டியபோது பாலசுப்பிரமணியத்தின் குறிப்பை பார்த்த சாஸ்திரி ஐயாத்துரை பிற்காலத்தில் இவர் பெரிய டாக்டர் ஆகும் பலன் இருப்பதறிந்து இவரது பெயரை பரராசசேகரம் என மாற்றும்படி கூறினார். இதனால் அவரின் பெயர் பரராசசேகரம் என மாற்றப்பட்டது.இவரே பிற்காலத்தில் இலங்கையிலேயே பெரிய கண்டாக்டர் என பெயரும் பெற்றுத் தற்பொழுது உலக ஐக்கிய நாடுகள் சபைக்குருட்டு வைத்தியப் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக கடமையாற்றி பல நாடுகளுக்கும் சென்று சேவையாற்றி வருகிறார். இராமச்சந்திரனாரின் இரண்டாவது மகன் சுந்தரலிங்கம். சுந்தரலிங்கம் இலங்கையின் குற்றத்தடுப்புப்பிரிவில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி இன்ரெலியன் பிரிவின் பொறுப்பதிகாரியாக பாவியேற்று பின்னர் பதவியிலிருந்து இளைப்பாறி வெளிநாட்டில் சேவைசெய்கின்றார். இரண்டாவது மகன் பாலசுப்பிரமணியம் கட்டிட இடமதிப்பாளராகக் கடமையாற்றினார்.நான்காவது மகன் சண்முகலிங்கம் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமானார்.ஐந்தாவது மகள் தனலட்சுமி உடற்பயிற்சி ஆசிரியராகத் தேறியவர், ஆறாவது புவனேஸ்வரி ஒரு பட்டதாரி.

இராமசந்திரருக்கு ஆன்மிக மார்க்கத்தில் மிகுந்த விருப்புடையவராயிருந்தார். நயினாதீவில் இவரது ஈமைக்கிருகைகளை முடித்து மயானத்தில் இருந்து திரும்பும்போது ஒரு சாமியார் நயினாதீவுக்கு வந்து பிள்ளையார் கோவிலில் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டார்.அன்றிரவு வீட்டில் தங்கியிருந்து அடுத்தநாள் விடியற்காலை நான்கு மணியளவில் எழுந்து முருகன் கோவிலில் தேக சுத்தம் செய்து கொண்டு சாமியாரைச் தரிசணம் செய்ய அருகலிருந்தவரோடு புறப்பட்டு முருகன் கோவிலருகே வந்தார். பிள்ளையார் கோவிலில் தங்கியிருந்த சாமியார் தான் நயினைப்புகழ் முத்துக்குமாரச்சாமியார்.இவர் தன் தீர்க்க தரிசனத்தால் இராமச்சந்திரர் தன்னைச் சந்திக்க வருவது தெரிந்து இராமச்சந்திரரை அவரது குடும்ப கோவிலில் சந்திக்க எண்ணி அங்கு சென்று தங்கியிருந்தார்.இராமச்சந்திரரும் மற்றவரும் சாமியாரை முருகன் கோவிலில் தங்கள் வருகைக்காக காத்திருப்பதைக்கண்டு ஆச்சரியமிகுந்தவராய் வணங்கி நின்றார்.சாமியார் இராமச்சந்திரனாரை இருக்கச் சொல்லிவிட்டு மற்றவரைப் பூப்பறித்து வரும்படி கூறினார்.பின்னர் இராமச்சந்திரனாரை நோக்கி நம்ம பட்டிதான்.ஆன்மிக விசயத்தில் அவசரப்படக்கூடாது என்று கூறினார்.உனக்குச் சிரமம் தரக்கூடாது என்றதற்காகவே உங்கள் குடும்பத்தின் புகலிடமான இந்ந கோவிலிலே உன்னைச்சந்திக்கவே நான் இங்கு வந்தேன் என்றார்.பின்னர் பலவற்றையும் பேசிவிட்டு நீ சமண மகரிசியைச் சந்திக்கவில்லையா? அவர் உன் வருகைக்காகக் காத்திருக்கிறார் எனவும் சொன்னார்.பல தடங்களின் பின் இவரது சினேகிதரான டாக்டருடன் சமணாச்சிரம் போய்ச் சேர்ந்தார்.சமண மகரிஷியின் தரிசனம் கிடைத்த பின் 1942ம் ஆண்டில் தொடங்கிப் பிரசுரித்த பெரியார் தோத்திர மஞ்சரியில் இராமகிருஷ்னர், சாரதாதேவி, விவேகானந்தர், காந்தியடிகள், சமணமகரிஷி, அரவிந்தர், இராமதாசர், சிவானந்தர் முதலாய மகான்கள் மீது இராமச்சந்திரனார் இயற்றிய தோத்திரங்கள் அடங்கியிருந்தன. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை இராமச்சந்திரனாரின் பலதுறைப்பட்டவை, பல சமயக் கொள்கையுடையவை என எழுதியுள்ளார்.அக்காலத்தில் இராமச்சந்திரனால் எழுதப்பட்ட அவரது 30 வயதுள்ள படைப்புகள் யாவும் வெளிவராது விடுபட்டுவிட்டன. இவரது கவிதைகளின் எளிய நடை இவர் நயினாதீவு நாகம்பாள் பற்றிப் பாடிய தோத்திரத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

எனக்கென்றோர் தனிவரம் நான் கேட்கவில்லை

என் இனத்தார் நல மொன்றே கருதவில்லை

உனக்கெல்லா உயிர்களுமே சொந்த மென்ற

உண்மையை யான் மறந்ததில்லை.

இராமச்சந்திரனார் உள்ளம் மெய்யடியார்களைப் போற்றிய மனப்பாங்கிற்கு பழன்வரும் திருத்தொண்டர் தொகை பாடல உவமையாகும்.

பக்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச்சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன்

முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மனுக்காளே.

இலங்கையில் இராமச்சந்திரனார் சர்வமத ஒருமைப்பாட்டுக்கு மிகவும் பாடுபட்டார்.இவர் சோதிடத்திலும் சிறந்து விளங்கினார்.இவர் தீர்க்க தரிசனமாக முற்கூட்டியே கூறியவை அப்படியே பிற்காலத்தில் நடந்தேறியயுள்ளது.இவர் சிறுகத் தொடங்கிய யாத்திரையும், நாட்டிலுள்ள திருத்தலங்களைத் தரிசித்ததோடு நிற்காது உலக யாத்திரையாகவும் உலகப் பணியாகவும் மாறியது.இவரது கட்டுரைகளின் தொகுப்பே 1967ல் பிரசுரிக்கப்பட்ட சமரசஞானக் கோவையாகும். இவரது சொற்பொழிவுகள் ஐரோப்பா, இந்தியா, அமேரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் ஆழ்ந்த அறிவு, ஆராச்சி, அனுபவம் நிறைந்ததெனவுப் பலரும் பாராட்டினார்கள். இராமச்சந்திரர் ஆத்மஜோதிப் பத்திரிகையை ஆரம்பித்து அதற்குக் கௌரவ ஆசிரியரானதோடு நா.முத்தையாவைப் பொறுப்பு ஆசிரியராகவும் ஆக்கினார்.

ஆக்கம் : கோபாலசுந்தரம் (S. Gopalasundaram)

இக்குறிப்புகள் அனைத்தும் ஆத்மஜோதி நா.முத்தையா எழுதிய இலங்கையில் ஓர் இல்லற ஞானி என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டவை.