19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1881-1900) வட்டுக்கோட்டையை தலைமையகமாகக் கொண்டு வியங்கிய அமெரிக்க கிறிஸ்தவ திருச்சபையினர் இன்று மகாவித்தியாலயம் இயங்குமிடத்திற்கருகில் ஒரு தேவாலயத்தையும், மடாலயங்களையும் அமைத்து சமயப்பணி செய்தனர். இவர்களால் ஆரம்பத் தமிழ்ப்பாடசாலை ஒன்று நிறுவப்பட்டது. இதன் அதிபராக யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கிறிஸ்தவ ஆசிரியர் ஒருவர் கடமையாற்றினார். உதவியாசிரியர்களாக ஊர் பிரமுகர்கள் கடமையாற்றினர். அவ்வாறு பணியாற்றியோரில் ஒருவர் ஆசிரியர் ஆசிரியர் கார்த்திகேசு அவர்களின் தந்தையார் நா.கனனரெத்தினம் அவர்கள். திருச்சபையினர் தமது சமய வளர்ச்சியையே நோக்காகக் கொண்டிருந்தனர் ஒரு சிலர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர். எனினும் அதில் நிலைத்திருக்கவில்லை. பொது மக்களின் ஆதரவு இப்பாடசாலைக்கு கிடைக்கவில்லை. தில்லையம்பல வித்தியாசாலையின ஆரம்பத்;துடன் இப்பாடசாலையின் வகுப்புக்கள் மூன்றாம் வகுப்பு வரை குறைந்து நாளடைவில் நலிவடைந்து செயலற்றது. இப்பாடசாலையில் கல்விகற்ற சிலர் ஆங்கில அறிவுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். எனவே அக்காலத்தில் ஆங்கிலக் கல்விக்கு இப்பாடசாலை உதவியுள்ளது எனலாம்