நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில்  ஆடிப்பூர உற்சவம் நேற்று ஆரம்பமாகி  தொடர்ந்து பத்துத் தினங்கள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று , எதிர்வரும்  ஆவணி மாதம் 9 ம்  திகதி, வெள்ளிக்கிழமைஅன்று ஆடிப்பூரம் நடைபெறும்.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க் கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எங்கள் விழுத்துணையே

– அபிராமிப்பட்டர்

பெற்றதாலன்னை பெறுமுயிரனைத்தும்,
பேணலாலன்னை பெற்றிடுவோர்
உற்றதாலன்னை விரும்பிய அனைத்தும்
உதவ லாலன்னை எக்கலையும்
சொற்றதாலன்னை உலகொடுவானும்,
தொழுதலாலன்னை யென்றென்றும்
பற்றதால் கருணை பொழிதலாலன்னை
பராபரை நாகபூஷணியாள்.

– நயினைப் புலவர் வரகவி நாகமணிப் புலவர்