ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்பவர்கள், திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாகவே இருப்பார்கள் என்ற மூடநம்பிக்கை காரணமாக, வீட்டில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடக் கூடாது என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் உண்மையில் அனுமன் ராமபிரானின் பக்தன் மட்டுமல்லாமல் ராமனின் உற்ற நண்பரும், சிவபெருமானின் அம்சமான ஆஞ்சநேயர் ஒரு பிரம்மச்சாரி மட்டுமல்ல ஒரு சிரஞ்சீவியும் ஆவார்.
ஆஞ்சநேயரின் வடிவங்கள் பல உள்ளது. அதில் பஞ்சமுக ஆஞ்சநேயரை நம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.அதிலும் ஆஞ்சநேயரின் வடிவங்களில் சஞ்சீவிராய ஆஞ்சநேயரே மிகவும் வலிமை மிக்கவர்.
எனவே நம் வீடுகளில் இருக்க வேண்டிய மூர்த்திகளில் ஆஞ்சநேயரும் ஒருவர் என்பதால் இந்த ஆஞ்சநேயரை நம் வீட்டில் வைத்து வழிபடலாம்.
ஆனால் ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வணங்கும் போது கட்டாயம் ராமபிரானின் படமும் வைத்து வழிபட வேண்டும்.
வழிபாடு செய்யும் காலத்தில் ராம நாமத்தினை கூறி, நம்முடைய அனைத்து விதமான கோரிக்கைகளை அவரிடம் வைத்து வணங்க வேண்டும்.
வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உட்பட சுபாகரியங்கள் நிறைவேறும்.
ஆஞ்சநேயரை வணங்கும் போது, கோரிக்கைகள் ஏதுவும் இல்லாமல் வழிபாடு செய்யக்கூடாது.
ஏனெனில் அவ்வாறு கோரிக்கை இல்லாமல் வழிபாட்டால், வழிபாடு செய்பவர் ஆஞ்சநேயர் போன்று பிரம்மச்சாரியாக வாய்ப்புள்ளது.