பித்ருக்களுக்கு ( மூதாதையர்களுக்கு ) தர்ப்பணம் கொடுக்கும் போது வேத விற்பன்னர்கள் சொல்லும் மந்திரங்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கலாம்.
எனவே தர்ப்பணத்தின் போது கீழ்கண்டவாறு மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள் அது போதும்.
” என் தாயார் ; என் தந்தை ; என் சகோதரர் ; என் உறவினர்கள் என்று எந்த வகையான உறவுகளுக்கும் உட்படாத என் கோத்திர பிரிவுக்குள்ளும் வராத எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இப்பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன. எந்த விதிக்கணக்கிலோ இயற்கையாலோ வியாதியாலோ விபத்தினாலோ இந்த உலகை விட்டு பிரிந்திருக்கக்கூடிய அனைத்து ஆத்மாக்களும் நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன் மேலுலகில் எந்த துன்பங்களும் அனுபவிக்காமல் மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் அனைத்து நன்மைகளும் பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும் ” என்று சொல்லி நம் மூதாதையர்களுக்கு தர்ப்பணத்தை அர்ப்பணிக்கவும்.
மகாளயபட்சம் என்பது 15 நாட்களைக் குறித்தாலும் சில ஆண்டுகளில் திதிகள் தொடங்கும் நேரத்தைப் பொறுத்து 14 நாட்களும் வருவதுண்டு . இந்த ஆண்டு ( 2017 ) மகாளயபட்சம் 14 நாட்களே வருகிறது.
அந்த வகையில்
6-9-2017 – பிரதமை திதி
7-9-2017 – துவிதியை திதி
8-9-2017 – திரிதியை திதி
9-9-2017 – சதுர்த்தி திதி
10-9-2017 – பஞ்சமி திதி
11-9-2017 – ஷஷ்டி திதி
12-9-2017 – ஸப்தமி திதி
13-9-2017 – அஷ்டமி திதி
14-9-2017 – நவமி திதி
15-9-2017 – தசமி திதி
16-9-2017 – ஏகாதசி திதி
17-9-2017 – துவாதசி திதி
17-9-2017 – திரயோதசி திதி
18-9-2017 – சதுர்த்தசி திதி
19-9-2017 – மகாளய அமாவாசை
என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 17ம் தேதி துவாதசி ; திரயோதசி திதிகள் வருவதால் அன்று அந்த திதிகளுக்கு உரிய தர்ப்பணம் கொடுக்கப்பட வேண்டும் அன்றைய தினம் இரு திதிகளுக்குரிய தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதில்லை ஏதாவது ஒரு திதியை நினைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்தாலே போதுமானது.
இப்படி செய்வதால் அன்றைய தினங்களுக்குரிய திதிக்கு ஏற்ப நிச்சயம் பலன்கள் கிடைக்கும். அவை என்னென்ன பலன்கள் தெரியுமா ?
பிரதமை திதி : செல்வ வளர்ச்சி
துவிதியை திதி : வம்ச விருத்தி
திருதியை திதி : நல்ல மணவாழ்வு
சதுர்த்தி திதி : பகை விலகும்
பஞ்சமி திதி : விரும்பிய பொருள் கிடைக்கும்
ஷஷ்டி திதி : நன்மதிப்பு
ஸப்தமி திதி : முன்னோர் ஆசி
அஷ்டமி திதி : அறிவு வளர்ச்சி
நவமி திதி : ஏழு பிறவிக்கும் நல்ல மனைவி குடும்பம் அமைதல்
தசமி திதி : விருப்பங்கள் நிறைவேறும்
ஏகாதசி திதி : கல்வி அபிவிருத்தி
துவாதசி திதி : ஆபரணங்கள் சேரும்
திரயோதசி திதி : நன்மக்கள் நீண்ட ஆயுள் பசுக்கள் விருத்தியாகும்
சதுர்த்தசி திதி – கணவன் மனைவி ஒற்றுமை
அமாவாசை – மூதாதையர்கள் ; ரிஷிகள் ; தேவர்களின் பரிபூரண அருள் கிட்டும்