மணிபல்லவம் ஒரு சர்வமத சன்னிதி, போதி மர்த்தவன் வருகையை ஓதி நிற்கும் வானுயர்ந்த விகாரை, இதனைப் புலப்படுத்திக் காட்டுகின்றது. அமைதியும் கருணையும் வழியும் தர்ம புத்தரின் பரிநிர்வாண நிலையும் இங்கு சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. பெரியசாமி என்றழைக்கப்பட்ட சாதுவும் அவருடன் ஏக காலத்தில் வாழ்ந்த பலப்பிட்டியூரைச் சேர்ந்த பண்டிட் தர்ம கீர்த்தி தேரரும் இவ்விகாரையின் தோற்றுவாயாகக் கொள்ளலாம்.
காலி மாவட்டத்தை சேர்ந்த அல்பிட்டி கிராமத்தில் அகம் பொலி வீற்றி மென்டிஸ் முத்து முனித றோசலின் நோனா தம்பதியினருக்கு மகனாக 1961.04.03 ம் திகதி பிறந்தார்.தமது ஆரம்ப கல்வியை அல்பிட்டி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று தனது 12வயதில் நயினாதீவிற்கு வருகை தந்தார்.
‘சின்னசாமி’ என்றழைக்கப்படுகின்ற நவதகல தர்ம கீர்த்தி திஸ்ஸ தேரர் அவர்கள் நயினாதீவில் புரட்சிகரமான மாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றார். இவரை அனகாரிக தர்மபால என்றழைக்கலாம் நயினை மக்களின் தேவையினை அறிந்து உதவி செய்து வருகின்றார். (வீடு கட்டிக் கொடுத்தல்) பாலம் போடுதல் பயணப்படகுச்சேவை ஊர் மக்களுக்கு வேலை கொடுத்தல், தேவையறிந்து பணவுதவி செய்தல் போன்றன இதனுள் அடங்கும்.
ஓவ்வொரு மாதமும் பௌர்ணமித் தினத்திலும் வெசாகக் பண்டிகைக் காலங்களிலும் பிரித்தோதப்பட்டு பௌத்தமத அனுட்டானங்கள் நடைபெறும். சாதாரண காலங்களிலும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பௌத்த சாதுக்களும் பௌத்த மக்களும் வந்து தரிசனம் செய்கின்றனர். இம் மண் சுற்றுலா பிரதேசமாக திகழ்கின்றது. ஓரளவிற்கு வருவாயும் ஈட்டிக் கொடுக்கின்றது.