உள்ளடக்கம்
நயினை ஸ்ரீ நாகபூஷணியம்மை திருவூஞ்சல்
காப்பு
சீர்பூத்த தென்னிலங்கை தன்னில் மேவும்
திரைபூத்த கடனயினை நகரில் வாழும்
ஏர்பூத்த நாகேசு வரியைப் போற்றி
இசைபூத்த செந்தமிழா லூஞ்சல் பாட
ஆர்பூத்த சடைமெளலி யரனா ரின்ற
அருள்பூத்த வறிபிச்சை தொழிலென் றேதும்
கார்பூத்த மும்மைமத களிற்றின் பாதம்
கரம்பூத்த மலர்கொண்டே கருதி வாழ்வாம்
நூல்
பலனோங்கு செம்பவளங் கால்க ளாக
பகர்வைர ரத்தினமே விட்ட மாக
குலனோங்கு வெண்டரளங் கயிற தாக
கூறரிய மாணிக்கம் பலகை யாக
வலனோங்கு மூஞ்சன்மிசை யினிது வைகி
மலர்மகளுங் கலைமகளும் வடந்தொட் டாட்ட
நலனோங்கு திருநயினை நகரில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல்.
உவகையொடு மலரயன்மால் கரங்கள் கூப்ப
ஓசைமணி வாயிலட்ட பாலர் காப்ப
தவமறையோர் தூபமொடு தீபங் காட்ட
தாழ்ந்துகண நாதர்புகழ் மாலை சூட்ட
அவரிடப துவசமகல் வாணந் தூர்ப்ப
அனந்தன்முத லுரகர்செய செயவென் றார்ப்ப
நவையறுசீர் நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல்.
கொம்பினொடு துடிமுரசு முழவ மோங்க
குடைகளுட னாலவட்டம் குழுமி யோங்க
தும்புருநா ரதர்வேத கீதம் பாட
தொண்டரக மகிழ்ந்துசுக. வாழ்வு கூட
வம்பவிழு மலர்மாரி யமரர் பெய்ய
வரமுனிவ ரடிபரவி யாசி செய்ய
நம்புமடி யவர்க்கருளி நயிளை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல்.
அன்னநடை யயிராணி கவிகை தாங்க
அயிலைநிகார் விழியரம்பை களாசி யேந்த
வன்னமுலை யுருவசிவெண் கவரி வீச
மணிகொள்கிரு தாசிகமண் டலங்கைக் கொள்ள
மின்னிடைமே னகைவெளிலை பாகு நல்க
வியந்திலோத் தமைவிகித நடனஞ் செய்ய
நன்னயஞ்சேர் நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாட ரூஞ்சல்.
மதிமுகமா லினிபனிநீர் வாசந் தூவ
மயிலைநிகர் சுகேசைமல ரடிக ணீவ
விதிமுறைமங் கலைமுதலோ ராலஞ் சாற்ற
வேதியர்தம் மகளிர்சுப வசலஞ் சாற்ற
௮திவினைய மொடுசுமனை யாடி காட்ட
அன்பினநிந் திதைசுகந்த வருக்க நீட்ட
நதியுலவு தயினைதகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல்.
கோலமுறு வைரமணிச் சுட்டி யாட
குலவுமெழின் மாணிக்கத் தோடு மாட
வாலியமுத் தாரமொடு மதாணி யாட
வயங்குவளை தொடியுடனங் கதமு மாட
சாலவொளிர் பாடகமுஞ் சிலம்பு மாட
தண்டையொடு பாதசரதந் தயங்கி யாட
ஞாலமுக மெனவிளங்கு நயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல்
முந்துதவ மாதர்துதி கூறி யாட
முகமனொடு புனன்மாதர் முன்னின் றாட
வந்தனையோ டுரகமட மாத ராட
வரையிலுறை மாதரடி வணங்கி யாட
கந்தருவ மாதரிசை பாடி யாட
கருதரிய புவிமாதர் களிகொண் டாட
நந்துதவழ் கழனிசெறி நயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல்.
ஆரணியே யம்பிகையே யாடீ ரூஞ்சல்
அந்தரியே செளந்தரியே யாடீ ரூஞ்சல்
பூரணியே புங்கவியே யாடீ ரூஞ்சல்
புராதனியே புராந்தகியே யாடீ ரூஞ்சல்
காரணியே காருணியே யாடீ ரூஞ்சல்
கன்னிகையே கண்மணியே யாடீ ரூஞ்சல்
நாரணியே நாயகியே யாடீ ரூஞ்சல்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல்
பனிவரையில் வருமுமையே பரையே போற்றி
பகருமற மெண்ணான்கும் வளர்த்தாய் போற்றி
தனிமுதலாம் பரமனிடத் தவளே போற்றி
தணப்பில்பல சக்திவடி வானாய் போற்றி
இனிமைமிகு மாரமுதே கனியே போற்றி
எவ்வுயிர்க்குந் தாயாகி இருந்தாய் போற்றி
நனிகுலவு நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல்
ஆவாழி யந்தணரோ டரசர் வாழி
அரியதவ மகநிகமா கமமும் வாழி
தாவில்குல மங்கையர்கள் கற்பும் வாழி
சைவசமய மும்மறமும் தழைத்து வாழி
பாவார்வெண் ணீறுபஞ்சாட் சரமும் வாழி
பாடியவூஞ் சற்றமிழும் பாரில் வாழி
நாவலர்கள் புகழ்நயினை நகரும் வாழி
நாகபர மேஸ்வரியும் வாழி வாழி
இக்காலத்தில் பாடப்படும் பாடல்
சீர்வாழி சிவசமயம் வாழி
தேவாதி தேவுமெல்லாத் தேவும் வாழி
பார்வாழி மதிதொறுமும் மாரி வாழி
பசுக்குலம்வே தியர்மதருமம் பலவும் வாழி
நீர்வாழி நயினைநக ருறைவோர் வாழி
நீடாயு ளன்னசொர்ணம் நிறைந்து வாழி
ஏர்வாழி இராமசந்திர மகிபன் வாழி
இனம்வாமி இவ்வூஞ்சல் வாழி மாதோ
ஶ்ரீலஶ்ரீ.ம. அமரசிங்கப்புலவரினால் பாடப்பட்டது.