நயினாதீவு நாகபூஷணி அம்மன் உயர் திருவிழா 2021.

அம்பிகை அடியார்களே!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொடிய நோய்த் தாக்கத்தின் தீவிரத்தினால் நாட்டின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஊர்மக்கள், உலக மக்களுக்கு அம்பிகையின் அருளாசி பூரணமாக கிடைக்க வேண்டும் என்ற அம்பிகையின் திருவுள்ளப்படி 10.06.2021 ஆரம்பிக்க இருந்த மகோற்சவமானது பிறிதொரு தினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

ஆகவே அம்பாளினை அவரவர் மனதிலிருத்தி, எம் நாடும், நாட்டு மக்களும் உன்னதமாக வாழ வழி செய்ய எல்லாம் வல்ல நாகராஜேஸ்வரியை துதித்து வழிபடுவோமாக.

தாயாகி வளர்தாய் போற்றி போற்றி எம் வாழ்நாள் முதல் ஆகிய தாயே நாகபூஷணி அம்மையே போற்றி போற்றி