நயினாதீவு நாகபூஷணியம்மை 

திருவிருத்தம்

சந்திரபூ ரணரத்ன தங்ககோ டக்கிரிட
தண்ணின்ற தவழ வட்டத்‌
தனபதியை நிகர்மன்ன ரடிதொழச் சதுரங்க
தானைவெள்‌ ளங்கள்‌ சூழச்‌
சிந்துரப்‌ பகைமைபிடர்‌ பீடிகை யிருந்தெண்டி
சாமுகமு மேயி றைஞ்சத்‌
தேவேந்ர சுகமுற்‌ நிருப்பவர்க ளுன்பாத
சேவைபுரி பவர்க ளன்றோ
மந்திர காரண ரூபரூ பாதிசிவ
மகமாயி புவன நேசி
வாலசுந்‌ தரிகெளரி நயினைமா நகர்க்கண்‌
வைகியருள்‌ செய்யு மொருதாய்‌
தந்துறு கரன்பிரம னங்கமணி கங்களொடு
நஞ்சணி பிறங்கு களமே
நாகமணி யும்பரமர்‌ பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.

சோடுற்ற நவரத்ன கும்பியும்‌ மேலிட்ட
தொங்கலும்‌ அகில ளாவிச்‌
சொருகிட்ட கொண்டையுஞ்‌ சுட்டியும்‌ மலர்‌க்கையால்‌
தொட்டிட்ட சிந்தூ ரமும்‌
தோடுற்ற கொந்தழக மரகதக்‌ கொப்புமார்‌
துணைவழியி லெழுது மையும்‌
துகளற்ற வெண்டரள முருகுநற்‌ பவளவாய்த்
துவருமொளிர்‌ நளின முகமும்‌
தேடுற்ற செங்கமல பொற்பதமு மழகான
திருவுருவு மறிவி னாலே
தெரிசிக்க வருடந்து நீடாயு ளும்பெருஞ்‌
செல்வ முந்தர வேண்டுநீ
நாடுற்ற பலவளமு முறையுமெழில்‌ நயினா
நகர்க்கண்‌ மருவுங்‌ கெளரியே
நாகமணி யும்பரமர்‌ பாகமுறு மேகசீவ
நாக ஈஸ்வரி யம்மையே.

ஆரணத்‌ துபநிடத வக்கரத்‌ தொனியாகி
யாகாய வட்ட மாகி
அறுகோண மிருகோண முக்கோண நாற்கோண
மாகிநிற மைந்து மாகி
காரணத்‌ துருவாகி யருவாகி யாவுமாய்க்‌
காக்குமுன்‌ பெருமை யெளிதோ
கருணைப்பிர வாகமா மானந்த வெள்ளங்‌
கசிந்தூ றுபே ராழியே
ஏரணைத்‌ திடுமருத வேலிசூழ்‌ நயினா
வெனுமபதி சிறந்து மேவும்‌
யாமள செளந்தரீ கோமள சொரூபியே
ராசபர மேசு வரியே
நாரணற் கொருசகோ தரியென்ன வந்தருளும்‌
நாக பூஷணீ நாரணீ
நாகமணி யும்பரமர்‌ பாகழுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.

சத்திபை ரவிகெளரி அக்கணியு முக்கணீ
சடாதரி சடாட்ச ரத்தி
சங்கரி சுமங்கலி மதங்கியரு ளம்பிகை
சவுந்தரி சண்ட சண்டி
உத்தமி பராபரை மனோன்மணி சிவானந்தி
யுமையிமைய முதவு மங்கை
உலகுதவு மன்னையா மளைபொன்னி னம்பலவ
ருடனிட மகிழ்ந்து மேவும்‌
நித்தியகல்‌ யாணிசாம்‌ பவிபுவன கெளமாரி
நிமலமக மாயி யென்றே
தெஞ்சில்நித முந்நினைவு தந்துனை வணங்‌கவரும்
நின்னடி யவர்க்‌ கருளுவாய்‌
நத்துலவு சுத்தமணி மெய்துநயி னாநகரில்‌
நாளுமுறை யாழின்‌ மொழியே
நாகமணி யும்பரமர்‌ பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.

ஆகமது கூனித்‌ தளர்ந்துரோ மம்வெளுத்‌
தைம்புல னொடுங்கி மேலாம்‌
அறிவழிந்‌ தைமே லெழுந்ததீ தத்தினுயி
ரணுகுமக்‌ காலை தனிலே
வேகவெங் கடமைபிடர் நெளியவரு ஞமனெற்கு
விடுகயிறு முடுகி யடுமுன்‌
வினையேனை யஞ்சலென்‌ றுனதுநா யகருடன்
வெள்ளை விடைமீ தேறியே
பாகமுற வந்துநின்‌ றடிமைகொண் டெனையும்நீ
பாதுகாத்‌ தருள வேண்டும்‌
பைங்குலைத்‌ தெங்கிளஞ்‌ சேலைசெறி நயினை நகர்‌
பண்பு கொண்டுறை செல்வியே
நாகமடர்‌ தாருவென மேவிமுனிவோர்‌ களுறை
நாடிவரு கோப விடமார்‌
நாகமணி யும்பரமர்‌ பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.

மாற்றிற்‌ சிறந்தபொற் குவையென்ன வளர்‌சாலி
வயலிற்‌ கிடந்த நத்தம்‌
மடையிற்‌ றவழ்ந்தேறி மனையிற்‌ புகுந்துழவர்‌
மனைமுன்றி லீனு முத்தை
ஆற்றிற்‌ சிறந்திடத்‌ தண்டுலங்‌ களையுநீர்‌
அள்ளிப்‌ புறத்தின்‌ மேவி
அருகுற்ற சோலையினு மிகு துற்ற வாவியினு
மரவிந்த வோடைக எளினும்‌
காற்றிற்‌ சிறந்துலவு கால்கொண்‌ டுலாவக்‌
கயற்கண்ணி வந்து மோதக்‌
கமுகினிற்‌ றெங்கினிற்‌ கதலியில்‌ வருக்கையிற்
கனியு மடலுஞ்‌ சிதறியே
நாற்றிற்கு மேகமழு மதுமாரி சொரியுநயி
னாநகரி னண்ணு முமையே
நாகமணி யும்பரமர்‌ பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.

வன்கய மருப்பென நிமிர்ந்தடி பருத்திறுகி
மணிவா ரறுத்து விம்‌மி
வட்டமிட்‌ டெழுகும்ப முலைமுகங்‌ காட்டியிரு
மகர விழிவலை வீசியே
மின்கய மதப்பொருள்‌ உள்ளம தலைத்துள
வெறுக்கையைப்‌ பற்றி யேற்கும்‌
வேசியர் தனக்கடிமை செய்விக்கு மென்னைமுன்
வினைநூறி யருளு தவுவாய்‌
பொங்கிடு நெடுந்திரைப்‌ புணரிநாற்‌ றிசையும்‌
பொருந்தநடு மேவி யுலகிற்
புகழ்பெருகு நயினைமா நகரினி லிருந்துமிகு
புதுமைதரு புனித தாயே
நன்கிய விளம்பிறையொ டொன்றைவேண்‌டிச்சடில
நன்பு கொண்டிடு நஞ்சுமார்‌
நாகமணி யும்பரமர்‌ பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.

சம்புசவ சங்கர திகம்பர நடம்புரி
சமர்த்தாதி யாதி யாய
தற்பர மதிச்சடில முக்குண சதுர்ப்புய
சதாசிவ சிவாசி வாய
எம்பரம வென்றுபதி னெண்கணமு மிம்பரு
மிறைஞ்சிவரு கணவ ருடனே
இங்கித முடன்கயிலை தங்‌கியுறை யம்பிகையி
னின்புக ழியம்ப வெளிதோ
அம்புய மடந்தைய ரரம்பையர்‌ வயந்தழுவு
மரியநவ சத்தி களெலா
மன்பினொடு தொண்டுசெயு முந்தனர விந்தபத
மந்தநிழல்‌ தந்த ருளவாய்‌
நம்பிவரு தொண்டர்பெற மங்கல மிகுந்தநயி
னாநகரி னண்ணு முமையே
நாகமணி யும்பரமர்‌ பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.

கந்தான சொசியச்‌ சினக்கும்‌ கடாதடக்‌
கைமலை முகத்த வுணனைக்‌
கால்கொண்‌ டுதைத்துவன்‌ றோலுரித்‌ துப்‌போர்த்த
காத லனைமன்‌ றடியே
முந்தாத ரத்தினொடு மிருநாழி நெற்பெற்று
முடிவிலா துயிர்க ளுய்ய
முப்பத்‌ திரண்டறந்‌ தன்னையுத வியவன்னை
மூவுலகு நீயா கையால்‌
சிந்தா குலங்கொண்டு யான்திரிதல்‌ நீதியோ
தினந்தி னம்சொல வேண்டுமோ
இருவுள மிரங்கியே சற்றுன்‌ கடைக்கண்‌
திருப்பி னால்வெகு பாரமோ
நந்தாத வரமுதவு நங்கையே நயினா
நகர்க்கண்‌ மருவும்‌ கெளரியே
நாகமணி யும்பரமர்‌ பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.

சீர்தங்கு தண்சுனை யெனச்சேர்‌ மனத்திற்‌
றிளைத்துக்‌ குழைத்‌த ரும்பும்‌
செஞ்சரண கஞ்சமலர்‌ தஞ்சமெனு மென்புன்
சிரக்கஞ்ச மீதில்‌ வைத்தே
ஏர்தங்கு நல்லருட்‌ பேறுதவி நெஞ்சத்‌
திடுக்கண்‌ தவிர்த்து அஞ்சேல்‌
என்றுமுன்‌ நின்றெமக்‌ கீடேற்ற முதவுவார்‌
யாருன்னை யின்றி யம்மா
பேர்தங்கு மகிலாண்ட டுக்குமதி லூறுபொருட்‌
பிரிவுஞ்‌ சராச ரமெனும்‌
பேருயிர்க ளுந்தந்து பாதுகாத்‌ தருளுமுன்‌
பெருமையாம்‌ பாட வெளிதோ
நார்தங்கு சற்குணத் தொண்டருய வென்றுநயி
னாநகரி னண்ணு முமையே
நாகமணி யும்பரமர்‌ பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.

– வரகவி. சி. முத்துக்குமாருப்புலவர் -