சங்கரப்பிள்ளை விசுவலிங்கம் தம்பையா நாகம்மா தம்பதிகளின் மகனாக 05.06.1937இல் பிறந்த இவர் நயினாதீவில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 01.05.1961ஆம் ஆண்டு குடியேற்றத் திட்ட அதிகாரியாகப் பதிவியேற்று நெடுங்கேணி, துணுக்காய், வேலணை ஆகிய மாவட்ட செயலகங்களில் பணிபுரிந்து 01.05.1984இல் ஓய்வு பெற்றார்.

1969 – 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனிக்குளம் சிவன் கோவில் அறங்காவலர் சபை உறுப்பினராகவிருந்து பல பணிகளை
ஆற்றியுள்ளார்.

1970ஆம் ஆண்டு நயினாதீவு ஸ்ரீகணேசா சனசமூக நிலையத்தின் தலைவராகவும் செம்மனத்தம் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலக
அறங்காவலர் சபைத் தலைவராகவும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலில் 1975 – 1983 வரை அறங்காவலராகவும், நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாள் ஆலய அறங்காவலர் சபைச் செயலாளராகவும் இருந்ததோடு ப.நோ.கூ.சங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்கம் போன்றவற்றின் மூலம் தொண்டாற்றியுள்ளார். நயினாதீவு அபிவிருத்திச் சபை, இந்துக் கலாசார அபிவிருத்திச் சபை செயலாளராகவுமிருந்து ஆற்றி வரும் இவரது சேவைகளைப் பாராட்டி மணிபல்லவ கலாமன்றம் தனது பொன்விழா ஆண்டில் விருது வழங்கிக் கௌரவிக்கின்றது. இவர் ஆரோக்கியமாக வாழப் பிரார்த்திக்கின்றோம்.