பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் அமைந்திருக்கும். அவையாவன:
- இந்திர நந்தி
- வேத நந்தி
- ஆத்ம நந்தி
- மால்விடை நந்தி
- தரும நந்தி
இவைகளில், இந்திர நந்தியை கோவிலுக்கு வெளியே சற்றுத் தொலைவில் கருவறையை நோக்கி அமைக்கின்றனர்.
வேத நந்தி அல்லது பிரதம நந்தியை சுதையாலும், சுண்ணாம்பாலும் மிகப் பெரிய அளவில் பெரிய மண்டபத்தினுள் அமைக்கின்றனர்.
ஆத்ம நந்தி கொடி மரத்தின் அடியில் அமைகிறது. இதற்கே, பிரதோஷ கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மால்விடை நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணுத்துள் அமைகிறது.
தரும நந்தி இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்
சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்குரிய பலன்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மும்முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும்.
5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும்.
7 முறை வலம்வந்தால் – நல்ல குணம் உண்டாகும்.
9 முறை வலம்வந்தால் – குழந்தை பாக்கியம் உண்டாகும்.
11 முறை வலம்வந்தால் – நீண்ட ஆயுள் கிட்டும்.
13 முறை வலம்வந்தால் – வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.
15 முறை வலம்வந்தால் – செல்வம் ஸித்திக்கும்; வறுமை விலகும்.
17 முறை வலம்வந்தால் – செல்வம் பெருகும்.
108 முறை வலம்வந்தால் – அஸ்வமேத யாகம் செய்த பலன்.
1008 முறை வலம்வந்தால் – ஒரு வருட தீட்சையாக பலன் கிடைக்கும்.