சனி தோஷம் , ஏழரைச் சனி உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் செய்யவேண்டிய பரிகார முறைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்தது, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும்.

துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சன்னிதானமடைந்து சனிதோஷம் நீங்கப் பிரார்திக்க வேண்டும்.

அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவருக்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசிக்கு 5ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். இதைச் சனிதோஷம் என்பர்.

இவர்கள் மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும். ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிரார்த்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும்.

சனி காயத்ரி மந்திரம்

சனி காயத்ரி
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்

ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்கு பாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்