கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்யும் போது சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

* கோவிலில் பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்.

* விளக்கேற்றும் பொழுதும் விளக்கில்லாத போதும் கோவிலுக்கு செல்லக்கூடாது.

* புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக் கூடாது.

* வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை பெருமாளுக்கு அர்பணிக்கக் கூடாது.

* நாராயண மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனம் செய்யக்கூடாது.

* மணமில்லாத மலர்களை சமர்ப்பித்தலாகாது.
* கோவிலுள் குப்பை கூளம் இடலாகாது.

* கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.

* துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லல் ஆகாது.

* தரிசனம் முடிந்து திரும்பும் போது பகவானுக்கு முதுகுகாட்டி திரும்பக்கூடாது.

* கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக் கூடாது.

* அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தலாகாது.

* ஆடம்பரமற்ற தன்மை முற்றிலும் வேண்டும்.

* ஆமணக்கு எண்ணெயை திரியிட்டு கோவில்களில் விளக்கு எரிக்கக் கூடாது.