நம் கலாச்சாரத்தில் ஒன்றாக உள்ள அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கிறது.கோலம் போடுவதில் பலவகைகள் உள்ளன. பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம், சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், மனை கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என்று ஏராளமான கோலங்கள் இருக்கிறது.

கோலம் ஒருவகை யந்திரமாகக் கருதப்படுகிறது. இதனால் இவை வீட்டு வாசலில் போடப்படுகிறது.

மேலும் மார்கழியின் போது கோலம் போடுவது அவசியம் என்பதற்கு பல முக்கியக் காரணங்கள் உள்ளது.

மார்கழி மாதத்தில் கோலம் போடுவதற்கான காரணங்கள்

மார்கழி மற்றும் டிசம்பர் போன்ற பனிக்கால மாதங்களில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் மாதங்களில் வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் இடப்பெயற்சி செய்கிறது.

இதனால் மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகை மற்றும் பூமியின் சக்தியில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது.

மேலும் இந்த மார்கழி மாதத்தில் மட்டும் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது.

எனவே இந்த மாற்றத்தின் போது நம்முடைய அறிவு மற்றும் ஞானம் அதிக சக்தியை பெருகிறது.

இதனால் மார்கழி மாதத்தில் இந்த மாற்றத்தின் சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மார்கழி மாதத்தில் அவசியமாக அதிகாலையில் எழுந்து கோலம் போட வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

மார்கழி மாதத்தில் கோலம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • காலையில் கோலம் போடுவதற்கு முன் சானம் தெளிக்க வேண்டும். ஏனெனில் சானம் கிருமி நாசினியாக பயன்படுவதால், நம் வீட்டு வாசலில் உள்ள கிருமிகளை அகற்றி, நமக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

  • சூரிய உதயத்திற்கு முன் நம் வீட்டு வாசலில் கோலமிடுவதால், நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராண வாயுவை கொடுக்கிறது. இதனால் நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளகிறது.
  • அதிகாலையில் நாம் குனிந்து நிமிர்ந்து, இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனித்து கோலம் போடுவது ஒரு யோகசனமாக உள்ளது. இதனால் நம் உடலில் இருக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
  • அதிகாலை கோலம் போடுவதால், நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப்படுகிறது. இதனால் இந்த முறையானது நம் சிந்ததனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாக உள்ளது. எனவே இதன் மூலம் தெளிவான சிந்தனைகள் தோன்றி, கவனச் சிதறல்கள் குறைக்கப்படுகிறது.
  • புள்ளிக் கோலம் போடுவதால், கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிக்கப்படுகிறது. எனவே கண்களுக்கு கொடுக்கும் இந்த பயிற்சியால் நமது கண் பார்வையும் அதிகரிக்கின்றது.
  • மேலும் அரிசி மாவில் கோலமிடுவது ஒரு வகை தானமே. மார்கழி மாதம் என்பது பனி, மழைக்காலம் என்பதால் எறும்பு, சிறு பூச்சிகள் இந்த அரிசி மாவு உணவாக பயன்படுகிறது.

இனியும் உங்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போட பழகிக்கொள்ளுங்கள். உங்கள் வீடு அடுக்குமாடி குடியிறுப்பில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. உங்கள் வீட்டின் முன் இருக்கும் சிறிய வாசலில் சிறிய கோலமிட்டு அனுதினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.