பசுவை பூஜை செய்வதே கோபூஜை. சகல தெய்வங்களும் பசுவின் உடலில் வீற்றிருப்பதாக ஐதீகம். பசுவிற்கு ஒரு பிடி புல்லோ, அகத்திக்கீரையோ கொடுப்பதை புண்ணிய செயலாக வேதம் குறிப்பிடுகிறது. கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களை இங்கு பார்ப்போம்.

கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிடைக்கும். நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையை செய்வது சிறந்த பலனை அளிக்கும்.

பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். கோமாதா பூஜையினால் செல்வச் செழிப்பு ஏற்படுகிறது. வியாதிகள் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்கிறது.

பசுவை வெள்ளிக்கிழமை பூஜித்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை கோபூஜை செய்வதால் நீங்குகிறது.பசுவை பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் கிடைக்கும்.