ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம், அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும், மேக மூட்டத்துடன் மறைந்து தோன்றினால் பருவம் தவறி மழை பெய்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தும், எப்படிப் பார்த்தாலும் அது அழிவைத் தருவதாகவே இருக்கிறது.

எனவேதான் சம்ஹாரமூர்த்தியான சிவனுக்கு அச்சமயம் விழா எடுத்து அவரைச் சரணடைந்து பிரார்த்திக்கும் நாளாக அக்கால கட்டத்தை அமைத்தார்கள். இதற்காகத்தான் மீனாட்சி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் பெயர்களில் ஆவணி வீதிக்கு மட்டும் ஆவணி மூல வீதி என்று நட்சத்திரத்துடன் இணைத்துப் பெயர் சூட்டினர்.

ஆவணி மூலத்திருநாள் அசுர சக்திகளை வென்று ஒழிப்பதற்குத் துணை செய்கிறது. மூல நட்சத்திரத்தின் அதி தேவதை நிருருதி என்ற அசுரன் தேவ சக்தி, அசுர சக்தி என்ற இருவகை சக்திகளில் தெய்வ சக்திகள் ஆத்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்கு அனுகூலமானவை.

அசுர சக்திகள், ஆன்ம முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவை. இந்த தேவ அசுரப் போராட்டத்தில் நாம் செய்வ சக்திகளிடம் தஞ்சமடைய வேண்டும். நிருருதி என்ற அசுரத் தலைவனின் செல்வாக்கு மூல நட்சத்திரத்தை ஆட்கொள்வதால் ஆவணி மூல விழாக் கொண்டாட்டத்தால் ஏற்படும் பக்தி உணர்ச்சியைக் கொண்டு அந்தச் செல்வாக்கை ஒழிக்க முயல வேண்டும் என்பர்.

மாணிக்கவாசக சுவாமிகளுக்காக சுந்தரேஸ்வரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளி அருள் பாலித்த தினம் இதுவாகும். அதாவது, மாணிக்கவாசக சுவாமிகளைப் பாண்டிய மன்னன், அவர் தமது கடமையில் இருந்தும், மன்னனின் கட்டளையில் இருந்தும் மீறியதற்காக, சிறையில் இட்டும், நெற்றியில் கல்லை வைத்து சூரியனை நோக்க வைத்தும் தண்டித்தார். சுவாமியவர்களை விடுவிப்பதற்காகச் சிவபெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு வந்து அவரைச் சிறையினின்றும் மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திரத் தினமாகும்.

இக்காலத்தில் வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும் பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. பாண்டிய மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்தளிக்கப்பட்டன. செம்மனைச் செல்வி(வந்தி) என்ற, பிட்டு விற்கும் ஏழை, மூதாட்டி, வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்தும் கடப்பாட்டுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். முதுமை காரணமாக, அவரால், தனது பகுதி வேலையை செய்ய முடியவில்லை. ஏழை மூதாட்டியார் மற்றவர் உதவியை நாடினார். கூலியாள் வடிவில் வந்த, சிவபெருமான் உதிர்த்த பிட்டை ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார். ஊதியத்தை உண்டபின், தனது வேலையைச் செய்ய, மூதாட்டியிடம் விடைபெற்று அற்றங்கரைக்குச் சென்றார்.

கூலியாள் தனது வேலையைச் செவ்வனே செய்யாது. ஆற்றங்கரையில் படுத்துறங்கினார். இதை கவனித்த மேற்பார்வை அதிகாரிகள், கூலியாளை எழுப்பி அவர் வேலையைச் திருந்தச் செய்யப் பணித்தனர். அது பலனளிக்காது போகவே கூலியாளுக்கு தண்டனை வழங்கினர். அத்தண்டனை ஒரு சவுக்கடியாக அமைந்தது. சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் உணர்ந்தான். தனது பிழையையும் உணர்ந்தனன் என சமய நூற்கள் கூறுகின்றன. இதன் காரணமாக இத்தினம் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மூலம் நட்சத்திர நாள், சீதோஷ்ணத்தை நிர்ணயிக்கும் முக்கியமான நாள். அன்று காலையில் சூரியன் உதயமாகும் போதே ஆக்ரோஷமாக வெப்பத்தைச் சிந்தினால், அந்த ஆண்டு முழுவதுமே வெயில் கடுமையாக இருக்கும். மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால், சிறப்பான சீதோஷ்ணம் காணப்படும். சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் என்ன தான் தங்கள் பணியைச் செய்தாலும், இறைவனுக்கு அவை பணியாளர்கள் தான். அவையனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை. கிரகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இறைவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து.நல்ல சீதோஷ்ணம் வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம்.

மூல நட்சத்திரத்திற்குரிய கிரகம் கேது. வாழ்க்கையின் நிலையாமையை பற்றிய ஞானத்தை தருபவர் இவர் கடவுளின் திருவடியே நமக்கு சரணாகதி என்று இவர் உணர்த்துகிறார். அன்னை சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. படிப்பிருந்தால் மட்டும் போதுமா? அதைப் பயன்படுத்தும் சமயோசித அறிவு, தைரியம், கடலையே தாண்டுவது போன்ற அமானுஷ்ய சக்தி போன்றவை வேண்டாமா! அதனால் தான், அந்த நட்சத்திரத்தை தன் ஜென்ம நட்சத்திரமாக்கிக் கொண்டார் ஆஞ்சநேயர். இப்போது உலகம் வெப்பமயமாதல் பற்றி அதிகமாகப் பேசுகின்றனர்.

இறைவன் நமக்களித்த இயற்கையைப் பாதுகாக்க தவறியதால் வந்த வினை இது. ஆவணிமூல நன்னாளில் வீட்டுக்கு ஒரு மரம் நடுவதன் மூலம், வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம். மேலும், மழை வளமும் நன்றாக இருக்கும். ஆவணி மூலத்தன்று சிறந்த சீதோஷ்ணம் கிடைக்க உள்ள இஷ்ட தெய்வத்தை வேண்டுங்கள். நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும். சனியின் தாக்கம் மிகவும் குறையும்.

அதே போல் பலவிதமான இன்னல்øள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும் அவருக்கு செய்பவகைகளில் சில, வடைமாலை சாத்துதல், செந்தூரக்காப்பு அணிவித்தல் வெண்ணெய் காப்பு சாத்துதல் ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்.

வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உயைது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும். என்ற நம்பிக்கை. அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது. ஆவணி மூலத்தன்று அனுமனை வழிபட்டு ஆசி பெறுவோமாக.

ஆவணி மூலம் 31-08-2017.