நயினாதீவு நான்காம் வட்டாரத்திலுள்ள தம்பகைப்பதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக ஸ்ரீ பத்திரகாளி உடனுறை வீரபத்திரசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையுடைய இவ்வாலயம் ஆரம்பத்தில் ‘ வீரபாகு கோயில் ‘ என்றும் ‘ இளைய பண்டாரம் ‘ கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. வீரபாகு என்ற பெயருடன் நயினாதீவில் சிலர் வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆரம்பகாலத்தில் இக் கோயிலுக்குள் வாளும், வேலும் வைத்தே வழிபாடு நடைபெற்றது. 1931 ஆம் ஆண்டு இடம்பெற்ற மகாகும்பாபிஷேகத்தின் பின்னரே இக்கோயில் வீரபத்திரர் கோயில் என்று அழைக்கப்பட்டுகின்றது. கந்தபுராண படனம் சிறப்பாக நடைபெற்று வந்த இக்கோயிலில் வருடம் தோறும் வரும் வைகாசி விசாகத்தன்று நடைபெறும் ‘ வேல்பூசை ‘ என்று கூறப்படும் ‘ பெரும் பூசை ‘ அன்னதானப் பெருவிழாவாக நடைபெறுவது குறிப்பிடற்பாலதாகும். ஆகம முறைப்படி அமைந்து விளங்கும் இவ்வாலயத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. 1933, 1954, 1981, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்ற இவ்வாலயத்தில் ஆலமரமும் வில்வமரமும் தலவிருட்சங்களாக விளங்குகின்றன.
[nggallery id=5]