ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமிகள் என்று அழைக்கப்படும் நயினாதீவுச் சுவாமிகளின் சமாதிக் கோயில் காட்டுக்கந்த சுவாமியார் கோயிலின் மேற்குப் பக்கத்தில் மேற்கு நோக்கிய நுழை வாயிலை உடையதாக அமைந்துள்ளது. 1986 இல் ஆறுமுகம் பார்வதி தம்பதியினருக்கு பிள்ளையாகத் தோன்றிய நயினாதீவு சுவாமியார் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 26.1.1949 இல் இருந்தபடியே மகாசமாதி நிலை எய்தினார். அந்த மகாஞானியின் சமாதி கிழக்கு நோக்கியதாகவே அமர்ந்த நிலையிலேயே வடிவேற் சுவாமிகளின் திருமுன்னிலையில் நயினையில் வைக்கப்பட்டுள்ளது. நித்திய பூசை நிகழும் சமாதிக் கோயில் நாற்புறமும் வாயில் உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. சாதி மேடை மேல் சோமாஸ்கந்த மூர்த்தியின் திருவுருவம் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது. சுவாமிகள் வணங்கிய சிறுசிவலிங்கம், நடேசர் என்பனவும் அம்மேடையில் உள்ளன. இச்சமாதி ஆலய முன்றலில் தலவிருட்சமாக உள்ள அரசும் வேம்பும் பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படுகிறது. போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரிய ஞானியாக நயினாதீவு ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமிகள் விளங்கினார் என்பது இன்று பலருக்கும் தெரியாததாகவுள்ளது.