Nainathivu | நயினாதீவு

நயினாதீவு

இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதே பிணக்கு/யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது.

நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன. எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன.இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில் புங்குடுதீவும், நேர் வடக்கில் அனலைதீவும் அமைந்துள்ளன.

நயினாதீவிற்கு தரை வழியாக பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீ செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவிற்கு செல்ல முடியும். நயினாதீவுக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.

நயினாதீவு இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களின் வழிபாட்டுத் தலங்களைத் தன்னகத்தே கொண்டே சர்வ சமரசம் நிலவும் இப்புண்ணிய பூமி எதிர்காலத்தில் சர்வசமயகளின் யாத்திரைத் தலமாகவும் சமயச் சுற்றுலா மையங்களில் ஒன்றாகவும் விளங்குமென்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

அறிவோம் ஆன்மீகம்

இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகள்!

இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளை இந்துதர்ம நூல்கள் முன்மொழிகின்றன. இவை ‘பஞ்ச நித்திய கர்மங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நித்திய கர்மம் என்றால் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டிய செயல்கள் எனப் பொருள்படும். இந்த ஐந்து முக்கிய செயல்களும் ஒரு உறுதியான, பொறுப்புள்ள, பண்பாடுமிக்க, தர்மநெறியில் செயல்படும் மனிதனை உருவாக்குகின்றன. 1) வழிபாடு (உபாசனை) வீட்டிலும் கோவிலிலும் வழிபாடு செய்யவேண்டும். வழிபாட்டு விதிமுறைகளைப் பற்றி ஆகமநூல்கள் விளக்குகின்றன. வழிபாட்டில் ஈடுபடும் போது கலாச்சார…

0 comments

வீட்டில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடலாமா?

ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்பவர்கள், திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாகவே இருப்பார்கள் என்ற மூடநம்பிக்கை காரணமாக, வீட்டில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடக் கூடாது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் உண்மையில் அனுமன் ராமபிரானின் பக்தன் மட்டுமல்லாமல் ராமனின் உற்ற நண்பரும், சிவபெருமானின் அம்சமான ஆஞ்சநேயர் ஒரு பிரம்மச்சாரி மட்டுமல்ல ஒரு சிரஞ்சீவியும் ஆவார். ஆஞ்சநேயரின் வடிவங்கள் பல உள்ளது. அதில் பஞ்சமுக ஆஞ்சநேயரை நம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.அதிலும்…

0 comments

பூஜை அறையில் சாமி படங்களை வைக்கும்போது கவனிக்க வேண்டியவை

பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்த்திர கருத்துக்கள் உள்ளன. தற்காலத்திலே நாம் நமது பூஜை அறையிலே நமக்கு விரும்பிய படங்களையும் நமக்கு அன்பளிப்பாக கிடைத்த சிறிய விக்கிரகங்களையும் குபேரனையும் வைத்து வழிபட்டு வருகின்றோம். ஆனாவ் பூஜை அறையிலே வைக்க வேண்டிய படங்கள் பற்றி சில சாஸ்த்திர முறைகள் உள்ளன. விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன்…

0 comments

வீட்டில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மை

மிகப் பழங்காலத்தில் இருந்தே விளக்கேற்றுவது என்பது வழிபாட்டின் முக்கியமான பகுதியாக இருந்திருக்கிறது. வீட்டில் மகாலட்சுமி என்றும் நிலைத்திருக்க விளக்கு ஏற்றுதல் மிகவும் அவசியம். அதாவது, பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. சூரிய உதயத்துக்கு ஒரு நாழிகை முன்னாலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு ஒரு நாழிகை முன்னாலும் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) விளக்கு ஏற்ற வேண்டும். இரவு, பகல் மாற்றம் ஏற்படும்போது சுற்றுப்புற சூழலில் நிகழும் சில…

0 comments

கோயிலின் நுழைவாயில் படிக்கட்டை கடந்து செல்வதன் நோக்கம் !

கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே. ஏன் தெரியுமா? ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும். பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும்.இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும்…

0 comments

திருநீறு பற்றி உங்களுக்கு என்ன தெரியும்….!

திருநீறு என்பதை திரு+நீறு என்று பிரிக்கலாம். திரு என்பது ‘தெய்வத்தன்மை வாய்ந்தது’ என்று பொருள். “பாவங்களை நீற்றுவதால்” நீறு என்று பெயர். ஆக திருநீறு என்பது ‘பாவங்களை நீக்கும் தெய்வத்தன்மையுடைய பொருள்’ என்று அறியலாம். திருநீற்றை வெறுமனே சாம்பல் என்று எண்ணாமல், அது ஒரு மாபெரும் கவசம் என்று நினைவுடன் பயபக்தியுடன் பதினெட்டு இடங்களில் அதற்குரிய வரிசையில் திருநீறு அணிதல் நல்லது எனப்படுகிறது. சைவ சமய நெறியைப் பின்பற்றுபவர்கள் திருநீறு…

0 comments

கல்வி, ஞானம் தரும் வைகாசி விசாகம் விரதம்

உலகில் அதர்ம செயல்கள் தலைதூக்கி, தர்மம் தடுமாறும் போது நல்லவர்களை காப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் யுகங்கள் தோறும் அவதாரம் செய்வதாக பகவான் கிருஷ்ணன் கூறுகிறார். அவதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு கீழே இறங்கி வருதல் என்று பொருள். மக்களின் துன்பங்களை போக்க இறைவன் ஏதோ ஒரு உருவில் உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் இதுவரை நிகழ்ந்த ஒன்பது அவதாரங்களும் இதை உணர்த்துகின்றன. சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து…

0 comments

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்?!

பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர். பூமி, காற்று, நெருப்பு, நீர், வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு, இரு கைகள் நம்மைக் காக்க’என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர். கடவுள்களுக்கும் பட்டங்கள் உண்டு. சிவனுக்கு `ஆல் அமர் செல்வன்’ கண்ணனுக்கு, `ஆலிலைப் பாலன்’ விநாயகனுக்கு ஆலமர அல்லது அரசமரத்தடி…

0 comments