நயினை திருப்பெருந்திரு முத்துக்குமாரசுவாமிகள்‌ அருளிச் செய்த ஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை

கற்பகக்‌ கன்றைக்‌ கடம்பனைத்‌ தந்த கனகவரை
அற்புத மோன வருணாகந்‌ தாங்கு மமிர்தவல்லி
தற்பரன்‌ வாமந்‌ தழைத்தே சகல உயிர்களுக்கும்‌
நற்பதி யேயெனைப்‌ பெற்ற சதானந்த நாகம்மையே.

பெற்றதாய்‌ பார்க்கப்‌ பிள்ளைதான்‌ வருந்திப்
பிறப்பெனுஞ்‌ சாகரத்தாழ
நற்றவ மில்லா வென்னைநீ விட்டால்‌ நியாயமோ
நல்லுரை யாகச்‌
சொற்றவக்‌ கரையி லேறியானுய்யத்‌ துணயுநீ
யேயன்றி யாருளர்சொல்‌
கற்றவர்க்‌ கனியாய்‌ நயினையம்‌ பதிவாழ்‌
கண்மணி நாகபூஷணியே.

கற்றவர்‌க் இனியாய்‌ நயினையம்‌ பதிவாழ்‌
காரணி நாரணன்‌ றங்காய்‌
மற்றவ ரறியா மரகத வரையின்
வாமமே வளர்பசுங்‌ கொடியே
நற்றவ ரோடு சேயெனை இருத்தி
நாதநா தாந்தமும்‌ காட்டி
முற்றுமாய்‌ நிறைந்த பூரணா னந்த
முத்திதா நாகபூஷணியே.

முத்‌தியாங்‌ கரையைப்‌ பற்றியே யுய்யும்
முன்னதாய்‌ முரணாலைமோதி
வற்றிடா மாய வாரிதி வித்தி
மயங்கியா னாழ்ந்திடாவாறு
சத்தியாய்ச்‌ சிவமாயத்‌ தளிப்பரந்‌ தாளே
தானுமாய்‌ நின்ற தற்பரையே
சித்தெலாம்‌ வல்லாய்‌ சேயெனைக்‌ காத்தாள்‌
திருமணி நாகபூஷணியே

காத்தெனை யாளுங்‌ கனகமா வரையே
கமலையும்‌ காயையும்‌ மருங்கே
நீத்தவ ரமரர்‌ கருடர்‌ கந்திருவர்‌
நின்பணி புரிவரரன்னே
வேர்த்தவ ராய்நின்‌ றுயிர்த்திர ளாட்டு
வினையெலாம்‌ பற்றுநீறாகப்‌
பார்த்தருள்‌ விழியைப்‌ பரப்புதி யீன்ற
பார்பதி நாகபூஷணியே.

 

பதிவிறக்க PDF