நாம் தினமும் வீட்டில் இறை வழிபாடு செய்வது வழக்கம். அப்படி இறை வழிபாட்டின் போது இறைவனுக்கு தீர்த்தம், பிரசாதம் வைப்பது அவசியம்.

நாம் கோயிலுக்கு செல்வதோடு வீட்டிலும் பூஜையறை என ஒதுக்கி அதில் கடவுளின் படம், விக்ரகம் வைத்து வழிபடுவது வழக்கம்.

அப்படி நாம் வீட்டில் இருந்து பூஜை செய்யும் போது, கண்டிப்பாக தீர்த்தம் வைக்க வேண்டும். அதோடு ஏதேனும் ஒரு பிரசாதம் வைக்க வேண்டியது அவசியம். தீர்த்தமும் பிரசாதமும் இன்றி பூஜை செய்வதால், அதனால் எந்த பலனும் இல்லை.

ஏன் பூஜையின்போது தீர்த்தம், பிரசாதம் வைக்க வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.




முதலில் இறைவனை பூஜிக்கும் முன் மனம் ஒருநிலை படுத்த வேண்டும். அவசர அவசரமாக கடமையே என பூஜை, வழிபாடு செய்யக்கூடாது. பூஜை செய்ய நேரம் இல்லை எனில் பூஜை செய்யாமல் இருப்பதே நல்லது. அப்படி அவசர அவசரமாக பூஜை செய்வதால் அதன் பலன் நமக்கு கிடைக்காமல் போகும்.

செய்வதைத் திருந்தச் செய் என்ற பழமொழி ஏற்ப நாம் இறைவனை பிரார்த்தித்து பூஜை செய்வதால் அதற்கேற்ற நமக்கு உண்டாகும்.



சரி, வீட்டில் பூஜை செய்யும் முன் என்னென்ன பொருட்கள் சுவாமிக்கு வைக்கவேண்டும் படைக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். பிரபஞ்சத்தில் நல்ல சக்தி, கெட்ட சக்தி என இரண்டுமே உள்ளன. அதேபோல் நம் வீட்டிலும் இரண்டுமே இருக்கும்.

நாம் நம் வீட்டில் நேர்மறையான ஆற்றல் மற்றும் நேர்மறையான நல்ல சக்திகள் இருக்க வேண்டுமென விரும்புவோம். நல்ல சக்தி, கெட்ட சக்தியில் நல்ல சக்தி தான் நம்மை தேடி வர விரும்புவோம்.

இறையருள் இல்லாத வீட்டில் எப்படி நல்ல சக்தி வாசம் செய்யும்?. அதனால் பூஜை செய்யும்போது மட்டுமாவது ஒருநிலைப்படுத்துவது அவசியம். தினமும் இறை வழிபாட்டிற்கு 10 நிமிடமாவது ஒதுக்குவது அவசியம். சதா பிரச்சனையை மனக்கவலை என இருக்கும் நிலையில் இருந்து வெளிவர இறை வழிபாடு உதவும்.

கிடைக்கும் போதெல்லாம் இறைவனை தியானிப்பது ஒரு பழக்கமாகவே வைத்துக் கொள்வது நல்லது.

தீர்த்தம்
இறைவன் நீரிலும் எழுந்தருளுவார். அதனால்தான் நதியைத் தெய்வமாகப் போற்றுகின்றோம். அதேபோல் வழிபாட்டிற்கு முன் நாம் நீரை தீர்த்தமாக வைத்து, பின்னர் இறைவனை வணங்குகிறோம். நாம் அந்த தீர்த்தத்தில், இறைவனே இந்த தீர்த்தத்தில் எழுந்தருள்வாயாக என வேண்டினாலே அதில் எழுந்தருள்வார்.

பிரசாதம்
அதேபோல் அதற்குமுன் பிரசாதம் வைப்பது அவசியம். ’ப்ர’ என்றால் கடவுள், சாதம் என்றால் வெறும் சாதம். வெறும் சாதத்தை இறைவனுக்கு படைக்கும் போது அது கடவுளாக மாறக்கூடிய பிரசாதமாக மாறுகிறது.

எனவே உங்களால் முடிந்த வரை குறைந்தது உடைந்த பொரிகடலை, கற்கண்டு, சர்க்கரை, பால், பழங்கள் பிரசாதமாக வைத்து வழிபடுவது நல்லது. அதிலும் குறிப்பாக வெற்றிலை பாக்கு வைத்து வழிபடுவது மிகவும் விசேஷமானது.



இப்படி முழுமையான பூஜை செய்து வழிபட மனோபலம் அதிகரிக்கும். செய்யும் காரியத்தில் எந்த தடையும் இல்லாமல், குழப்பமில்லாமல் சரியாக செய்து முடிக்க ஆற்றல் கிடைக்கும். செயலில் உற்சாகம் குடிகொள்ளும்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து அமைதி உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். இறை வழிபாட்டின் போது மனநிலையை ஒருமுகப்படுத்தும் முயற்சி மேற்கொண்டால், அது நாம் சாதாரணமாக செய்யும் செயலை முடிக்க மனநிலை ஒருமுகப்படுத்தும் ஆற்றலைக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தது.

அதன் காரணமாக பூஜையை சரியான முறையில் செய்வது அவசியமாக பார்க்கப்படுகிறது.