முருகப் பெருமானை நாம் பல்வேறுபட்ட பெயர்களால் அழைத்து வருகின்றோம். ஒவ்வொரு பெயரும் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் உதித்தவையாகும்

அழகன் – முருகு என்றால் அழகு என்று பொருள். ஆகவே தான் அழகன் என்பதாகும்.

முருகேசன் – முருகனும் ஈசனும் இணைந்த சொரூபம் முருகேசன்.

சேயோன் – சேய் என்றால் குழந்தை என்பதாகும். முருகன் குழந்தையாக காட்சி அளிப்பதால் இந்த பெயர்.

ஆறுமுகன் – ஆறு முகங்களை உடையவன்.

குமரன் – குமர பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவன்.

சுவாமிநாதன் – தந்தைக்கு பிரணவ மந்திரத்தை குருவாக உபதேசம் செய்தவன்.

கந்தன் – சிவபெருமாளின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிபட்ட தீ பொறி பொற்றாமரை குளத்தில் உள்ள தாமரை மலரின் நடுவே உள்ள கந்தகத்தில் பட்டு குழந்தையாக தோன்றியதால் கந்தன் என்று பெயர்

கார்த்திகேயன் – கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.

சண்முகம் – அன்னை பராசக்தியால் ஆறு உருவமாக இருந்தவன் ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரேமுகமாக ஆக்கப்பட்டதால் சண்முகம் என அழைக்கப்பட்டான்.

தண்டாயுதபாணி – தண்டாயுதத்தை ஏந்தியவன்.

வடிவேலன் – வேலை ஏந்திய அழகிய முருகனை இத்திருபெயரால் அழைப்பார்கள்.

சுப்ரமணியன் – மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.

மயில்வாகனன் – மயிலை தனது வாகனமாக கொண்டவன்.

ஆறுபடையப்பன் – ஆறுபடை வீடுகளைக்கொண்டவன்.

வள்ளல்பெருமான் – தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளை கொடையாக வாரி வழங்குவதால் இப்பெயர்.

சோமாஸ்கந்தர்  தந்தை சிவனுக்கும், தாயார் பார்வதிதேவிக்கும் நடுவே குழந்தை ரூபமாக இருப்பவன்.

முத்தையன் – முத்துகுமாரசுவாமி, முத்துவேலர்சுவாமி ஆகிய பெயர்களின் சுருக்கமான பெயர் ஆகும்.

சேந்தன்  ஆறு நபராக இருந்து ஒருவராக சேர்க்கப்பட்டதால் சேந்தன் என பெயர்.

விசாகன் – முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என பெயர்.

சுரேஷ் – அழகுக்கு சுரேசன் என்று பொருள். அதுவே சுருங்கி இவ்வாறானது.

செவ்வேல் – சேவல்வேல் என்பதே மருவி செவ்வேல் ஆனது.

கடம்பன் – சிவகணங்களில் ஒருவனான கடம்பனை முருகன் தனது உதவியாளனாக சேர்த்து கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது.

சிவக்குமார் – சிவபெருமானின் குமாரன் என்பதால் சிவக்குமார் என்று பெயர்.

வேலாயுதம்  வேல் தனை ஆயுதமாக கொண்டவன் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

ஆண்டியப்பன் – ஞானபழம் கிடைக்காமல் ஏமாந்த நிலையில் கோமண ஆண்டியாக நின்றவன்.

கந்தசாமி – தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து தோன்றிய தெய்வம் என்பதால் கந்தகடவுள் அல்லது கந்தசாமி என பெயர் ஏற்பட்டது.

செந்தில்நாதன் – சிந்தனைநாதன் என்பதே மருவி செந்தில்நாதன் ஆக மாறியது.

மலையாண்டி – பழநி என்னும் மலைமேலே ஆண்டியாய் நின்றதாலே மலையாண்டி எனப்பெயர்.

ஞானபண்டிதன் – ஞான பழத்திற்காக சினம் கொண்டு சென்றவன். அறிவிற் சிறந்தவன். (ஞானம் அறிவு, பண்டிதன் – அனைத்து கலைகளையும் கற்றவன், போதிப்பவன். பிரணவ மந்திரத்தின் பொருளை போதித்ததால் இப்பெயர்).

வேல்முருகன்  – வேல் தனை கரம் தனில் ஏந்திய முருகன் என்பதாலே வேல்முருகன் என்று அழைக்கப்பட்டான்.