நம்முடைய இந்து தர்மப்படி, நாம் உருவாக்கும் சட்ட திட்டத்திற்கு நாமே கட்டுப்பட வேண்டும். அதாவது இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம் உண்டு என்ற வகையில் அவரும் நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்ற வாதமும் உள்ளது.

நவகிரகங்கள் என்பது இறைவன் அளிக்கும் உத்தரவின்படி, இறைவன் நினைத்ததை நிறைவேற்றும் ஊழியர்கள், நவகிரகங்களை இறைவனின் தூதர்களாகவே கருதுகின்றனர்.

கோவிலுக்கு செல்லும் போது, கடவுள்களில் முதல் தெய்வமாக கருதப்படும் விநாயகரை வழிபட்டு, பின் அந்த கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவகிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வழிபடுவதே இந்துக்களின் கலாச்சாரமாக உள்ளது. இதனால் சிறந்த பலன்கள் நமக்கு கிடைக்கிறது.

நவகிரகங்களை வழிபடும் முறைகள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்களும் நவகிரகங்கள் என்று கூறப்படுகிறது.



கோவிலில் இருக்கும் இந்த நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும்.

ஏனெனில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும்.

ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை, எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடதுபுறமாகச் சுற்ற வேண்டும்.

கோவிலில் இருக்கும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி முடித்துவிட்டு, கடைசியாக மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களை சுற்றிவர வேண்டும்.