நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017

அம்பிகை அடியார்களே!

ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க நயினாதீவில் ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகஈஸ்வரரின் அரவணைப்புடன் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நிகழும் ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 11ஆம் நாள் (25.06.2017) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 01.07.2017 திருக்கயிலைக் காட்சியும், 04.07.2017 திருமஞ்ச திருவிழாவும், 07.07.2017 (வெள்ளிக்கிழமை) இரவு சப்பறத் திருவிழாவும் 08.07.2017 (சனிக்கிழமை) அகிலாண்டேஸ்வரிக்கு தேர் உற்சவமும் இடம்பெற்று 10.07.2017 இரவு தெப்போற்சவத்துடன் நிறைவுபெறும்.

இலங்கையின் கடல் சூழ்ந்த தீவாகிய நயினாதீவில் அழகொழுக வீற்றிருந்து அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் உயர்திருவிழாவிலே அன்னையடிவர்கள் வருகைதந்து அன்னையவள் திருவருட்கடாட்சத்தினை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.

எம்மையும் உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்

மேலும் பதிவுகளை வாசிக்க

நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகா... இன்று நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகத்தின் போது 108 வலம்புரி சங்குகளால் சங்காபிசேகம் நடைபெற்று அம்பாள் வீதியுலா வரும் காட்...
தில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழ... நயினாதீவு தில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழாவிற்கான  கும்பஸ்தானம் மிக பக்திப் பரவசத்துடன் 02.06.2017 அன்று ஆரம்பமா...
நயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிட... நயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளி மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு மிகவும் சவாலாக இருந்த கல்விக் கூடத்தை, அமரர்கள் கதிரன் -கந்தையா, சின்னத்தங்கச்சி அ...
ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.... உலக குழந்தைகளின் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டியும் கல்வி செல்வம் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கப் பெறவும் நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள...
நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தி... நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் நேற்றைய தினம் மஹா சிவராத்திரி அபிசேக ஆராதனைகளும், இன்றைய தினம் அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் த...
நயினாதீவு மலையடிசபரி ஐயப்பன் ஆலய ஐயப்ப விரத ஆரம்ப ... நயினாதீவு மலையடி வாரத்தில் வீற்றிருந்து அருள் மழை சொரியும் சபரி ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்ற ஐயப்ப விரத ஆரம்ப நிகழ்வுகள். நிகழ்வின் பதிவுகள் :எம...