பரஞ்சோதி முனிவர் ஒருசமயம்,மதுரை வந்த போது அவர் கனவில் அன்னை மீனாட்சி அம்மன் தோன்றி,சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய லீலைகளை அழகிய தமிழில் தெள்ளத்தெளிவாக பாடுமாறு உத்தரவுயிட்டார்.

அன்னையின் உத்தரவின்படி,பாடப்பட்டதே திருவிளையாடல் புராணம்.திருவிளையாடல்கள் 64 உள்ளன.முதல் 18 படலங்கள் மதுரை காண்டத்திலும்,19 முதல் 48 படலங்கள் கூடற் காண்டத்திலும், 49 முதல் 64 படலங்கள் திருவாலவாய் காண்டத்திலும் இடம் பெற்றுள்ளன.
 1. இந்திரன் பழிதீர்த்தப் படலம்!
 2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
 3. திருநகரங்கண்ட படலம்!
 4. தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம்!
 5. தடாதகையாரின் திருமணப் படலம்!
 6. வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்!
 7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!
 8. அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!
 9. ஏழுகடல் அழைத்த படலம்!
 10. மலையத்துவஜனை அழைத்த படலம்!
 11. உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்!
 12. உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்!
 13. கடல் சுவற வேல் விடுத்த படலம்!
 14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்!
 15. மேருவை செண்டால் அடித்த படலம்!
 16. வேதத்திற்கு பொருளருளிச் செய்த படலம்!
 17. மாணிக்கம் விற்ற படலம்!
 18. கடலை வற்றச் செய்த படலம்!
 19. நான் மாடக்கூடலான படலம்!
 20. எல்லாம் வல்ல சித்தரான படலம்!
 21. கல் யானைக்கு கரும்பு தந்த படலம்!
 22. யானை எய்த படலம்!
 23. விருத்த குமார பாலரான படலம்!
 24. கால் மாறி ஆடிய படலம்!
 25. பழியஞ்சின படலம்!
 26. மா பாதகம் தீர்த்த படலம்!
 27. அங்கம் வெட்டின படலம்!
 28. நாகமெய்த படலம்!
 29. மாயப் பசுவை வதைத்த படலம்!
 30. மெய் காட்டிட்ட படலம்!
 31. உலவாக்கிழி அருளிய படலம்!
 32. வளையல் விற்ற படலம்!
 33. அட்டமா சித்தி உபதேசித்த படலம்!
 34. விடையிலச்சினையிட்ட படலம்!
 35. தண்ணீர் பந்தல் வைத்த படலம்!
 36. இரசவாதம் செய்த படலம்!
 37. சோழனை மடுவில் வீழ்த்திய படலம்!
 38. உலவாக்கோட்டை அருளிய படலம்!
 39. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!
 40. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்!
 41. விறகு விற்ற படலம்!
 42. திருமுகம் கொடுத்த படலம்!
 43. பலகையிட்ட படலம்!
 44. இசை வாது வென்ற படலம்
 45. பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்!
 46. பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!
 47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்!
 48. நாரைக்கு முக்தி கொடுத்த படலம்!
 49. திருவால வாயான படலம்!
 50. சுந்தர பேரம்பு எய்த படலம்!
 51. சங்கப் பலகை கொடுத்த படலம்!
 52. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்!
 53. கீரனைக் கரையேற்றிய படலம்!
 54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்!
 55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்!
 56. இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்!
 57. வலை வீசிய படலம்!
 58. வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்!
 59. நரியை பரியாக்கிய படலம்!
 60. பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்!
 61. மண் சுமந்த படலம்!
 62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்!
 63. சமணரைக் கழுவேற்றிய படலம்!
 64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்!