‘குத்து விளக்கு’ தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது என்பர்.இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ – மலை மகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.

class="responsive-img aligncenter wp-image-2934 size-full" src="http://nainathivu.com/wp-content/uploads/2017/08/0.jpg" alt="" width="720" height="596" /> இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.
பஞ்சுத் திரிதான் விளக்கேற்ற மிகவும் உகந்தது. மெல்லிய திரிகளாகத் திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திரிக்கும்போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும். குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய பிறகுதான் திரியிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.

குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினைச் செய்ய குறிப்பிட்ட நாள்கள் உண்டு.
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி கிய நாள்களில் மட்டும்தான் குத்து விளக்கினைத் தேய்த்தல் வேண்டும்.
திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும், குககுரு தன தாட்சாயணியும் குத்து விளக்கில் பூரணமாகக் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்த நாள்களில் விளக்கினைத் தேய்த்துக் கழுவுவதால் இந்தச் சக்திகள் விலகிப் போகும் என நம்புகின்றனர். வெள்ளியன்று கழுவுவதால் அதில் குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப் போய் விடுவாள் என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.

விளக்கை முதலில் நீரால் கழுவிப் பின்பு எண்ணெய்ப் பிசுக்கு நீங்கும் வண்ணம் தேங்காய் நார் கொண்டு பச்சைப்பயறு, வெந்தயம், பச்சரிசி, எலுமிச்சைத் தோல்
சேர்த்து அரைத்த சிகைக்காய்ப் பொடி போட்டுத் தேய்க்க வேண்டும். கடைசியில் எலுமிச்சைச்சாறு ஊற்றி சுத்தப்படுத்தித் தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.

ஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும்.

மனம் நிலைப்பட திங்கள் அன்று தீபம் போட வேண்டும்.’குரு பார்வை’ இருந்தாலும் கடினமான வேலைகளையும் கூட எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் எளிதாகச் செய்ய முடியுமே! வியாழன் அன்று தீபமேற்றினால் ‘குருவின் பார்வையும் -அது தரும் கோடி நன்மையும்’ நமக்கே கிடைக்கும்.
வாகன விபத்துக்களைத் தவிர்க்க உதவுவதுதான் சனியன்று விளக்குத் துலக்கி நாம் போடும் தீபம்.

மற்ற நாள்களில் விளக்குத் துலக்காமல் தீபம் போடலாம்.

விளக்குத் துலக்காத நாள்களில் விசேஷமான நோன்பு, பூஜைகள் வந்தால், விளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான துணியினால் விளக்கைத் துடைத்து தீபம் ஏற்றலாம்.

விளக்கில்லாத கோயிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்பட வேண்டிய ஒன்று. தாமரை நூல் தீபம், மனதுக்குப் பிடித்த துணையுடன் இணைத்து வைக்கும்.

வாழைத் தண்டின் நூலில் திரி செய்து தீபம் ஏற்றுவது மக்கட் பேற்றைத் தரும். வெள்ளெருக்குப் பட்டையில் திரித்துத் தீபம் ஏற்றுவது காற்று சேட்டையை விலகச் செய்யும்.

பஞ்சமி திதியில் விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும். புதிதாக நெய்த பருத்தி
ஆடையில் அரைத்த சந்தனம், பன்னீர் சேர்த்துத் தடவிக் காய வைத்து, அதைத் திரியாக்கி வடக்குமுகமாக வைத்து, ‘பஞ்ச தீப’ எண்ணெய் ஊற்றித் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும். பல காலமாக வராமலிருந்த பணம் தேடி வரும். இது அருந்ததிக்குச் சாவித்திரி தேவி அருளிய வாக்கு.

ஒரு தீபம் ஏற்றுவது தவறு. சிறிய ஜோதி விளக்கானாலும் இரண்டு திரி போட்டு இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். இது குடும்பத்திற்குப் பல நலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.