குங்குமம் இந்துப்பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பொடி. இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது.

மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண், அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.  எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.

உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும்.

குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் விட்டமின் டி உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்களுக்கு மிகவும் நல்லது.

இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக்கட்டாயமாக பின்பற்றி வருகின்றார்கள்.

அம்மன் கோவில்களில் பிரசாதமாக குங்குமம் தரப்படுகிறது. செயற்கையாகத் தயாரிக்கப்படும் குங்குமம் இடுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. தவிர தற்காலத்தில் ஒட்டுப்பொட்டுக்கள் பயன்படுத்த எளிதாகவும் மலிவாகவும் கிடைப்பதால் குங்குமம் கோவில்களிலும் இந்து சமய சடங்குகளின் போதும் பயனாகிறது.