இறைவனுக்கு காணிக்கையாக அளிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் மனிதர்களுக்கு ஒவ்வொரு பலனைத் தருவதாக அமையும்.

அந்த வகையில் ஒரு சில முக்கியப் பொருட்களை இறைவனுக்கு காணிக்கையாகவும், இறைவனுக்கு அபிஷேகப் பொருட்களாகவும் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளில் ஒருசிலவற்றை நமது ஆன்மீக மலர்.காம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1. மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்

2. பழங்கள் – விளைச்சல் பெருகும்

3. சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்

4. சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்

5. தேன் – இனிய சாரீரம் கிட்டும்

6. பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்

7. எண்ணெய் – சுகவாழ்வு

8. இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்

9. பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

10. தயிர் – பல வளமும் உண்டாகும்

11. நெய் – முக்தி பேறு கிட்டும்

மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் கோயில்களில் நடைபெறும் அபிஷேகத்தின் போது இறைவனுக்கு சமர்ப்பிக்க இயலாதவர்கள், குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் அதற்குரிய பொருட்களை மட்டும், இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்போது காணிக்கையாக அளித்து கொடிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.