கட்டுரைகள் | Nainathivu | நயினாதீவு

கட்டுரைகள்

பலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்

நயினாதீவு மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதுடன் அழிந்து போன குமரிக்கண்ட வரலாற்றோடு மிகவும் கூடிய தொடர்பு கொண்டு இருந்த ஒரு இடம் என்பது பல வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுகொள்ளப்பட்டது . குமரிக்கண்டத்தில் மக்களின் நோய்களை பல சித்தர்கர்கள் சித்த வைத்திய முறைகள் மூலம் தீர்த்தார்கள் . இவர்களின் அகத்தியர் ,புலஸ்தியர் ,மரீசி போன்றவர்கள் புகழ் பெற்றவர்களாக இருந்தார்கள் என்று புராணங்கள் வாயிலாக அறிகின்றோம் .இந்த மரீசியின் மகன் காசிபன் வழியில் வந்த ஆதிசேடன்…

0 comments

நயினாதீவும் பிறநாட்டார் தொடர்பும்

நயினாதீவிற் சிறந்த துறைமுகங்களும், யாத்திரைத் தலங்களும் இருந்தமையால் பல வெளிநாட்டு வணிகர்களும், பல வெளிநாட்டு யாத்திரிகர்களும் காலத்துக்குக் காலம் இத்தீவைத் தரிசித்தனர். புத்தர் பெருமான் கி.மு 523 இற்கும் கி;.மு 483 இற்குமிடையில் தமது யாத்திரை காரணமாக நாகதீவைத் தரிசித்து நாக வழிபாடியற்றியிருக்க வேண்டும். அவர் வந்தபோது ஏற்பட்ட அரச சபைப் பிணக்கையும் தீர்த்து வைத்துள்ளார். சாவக நாட்டு மன்னன் புத்தரது பாதபீடிகையைத் தரிசிக்க மரக்கலமேறி வந்தனனென மணிமேகலை கூறும்,…

0 comments

நயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்

சர்வ மத சன்னிதியாய் திகழும் நயினாதீவில் முஸ்லீம் மக்களும் வாழ்கின்றார்கள் .இவர்கள் இந்த தீவுக்கு எப்பொழுது முதன் முதலில் வந்தார்கள் என்ற காலத்தை சரியாக கணிப்பிட்டு கூற முடியாவிட்டாலும் ,காலத்துக்கு காலம் முஸ்லீம்களின் வருகை என்பது ஈழ நாட்டில் இருந்து இருக்கிறது .ஈழத்தில் புராதன துறைமுகங்களில் ஒன்றாக நயினாதீவு துறை முகம் விளங்கியதால் ,நாகர்களின் கதிரை மலை அரசு சிறப்பு பெற்று இருந்த கி மு 3 , 4…

0 comments

ஈழத்தின் பூர்வீக துறைமுகம்

நயினாதீவு என்ற இந்த சிறிய தீவு ஏன் இலங்கையில் எந்த ஒரு இடத்துக்கும் இல்லாத அளவுக்கு அனைத்து புராண, இதிகாச, இலக்கியங்களோடும், வரலாற்று சான்றுகளோடும் தொடர்புபட்டு இருக்கிறது .அதற்கான காரணம் என்ன? என்ற இந்த கேள்வி உலக அளவில் அனைத்து தமிழர்களிடமும் இருக்கிறது . 1. ஆதி சக்தியின் சக்தி பீடமான புவனேஸ்வரி பீடம் இங்கு அமைந்து இருப்பது அனைவரும் அறிந்த வரலாற்று சான்றாக இருக்கிறது .அந்த ஆலயம் இன்றும் மிகவும்…

0 comments