நயினாதீவு

இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதே பிணக்கு/யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது.

நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன. எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன.இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில் புங்குடுதீவும், நேர் வடக்கில் அனலைதீவும் அமைந்துள்ளன.

நயினாதீவிற்கு தரை வழியாக பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீ செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவிற்கு செல்ல முடியும். நயினாதீவுக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.

நயினாதீவு இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களின் வழிபாட்டுத் தலங்களைத் தன்னகத்தே கொண்டே சர்வ சமரசம் நிலவும் இப்புண்ணிய பூமி எதிர்காலத்தில் சர்வசமயகளின் யாத்திரைத் தலமாகவும் சமயச் சுற்றுலா மையங்களில் ஒன்றாகவும் விளங்குமென்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

அறிவோம் ஆன்மீகம்

⁠⁠⁠ருத்ராட்சம் அணியும் முறை !

ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள், வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. சிவ பெருமான் தன்னை பொன்னால் அலங்கரிக்காமல் ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் அதிகமாகத் தானே இருக்கும். ருத்ரன்+ அட்சம் என்பதே ருத்ராட்சம். சிவனின் கண், அல்லது சிவனின் கண்ணில் இருந்து வந்தது என்று பொருள் கூறுகிறார்கள். ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருத்ராட்சம் அறிந்து…

0 comments

சனிதோஷம் எளிதில் நீங்கும் பரிகாரம்

சனி தோஷம் , ஏழரைச் சனி உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் செய்யவேண்டிய பரிகார முறைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்தது, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும். துளசி,…

0 comments

கண் திருஷ்டியில் இருந்து காக்கும் தர்மம்

புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்தாலும் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுவதை கண்கூடாக நாம் காணலாம். எந்தவொரு மனிதனுக்கும் கண்திருஷ்டி ஏற்படுவது இயற்கை. சிலரது பார்வையால் ஏற்படும் கதிர்வீச்சுகள் பாதிப்புகளை உருவாக்குகின்றன. ஓகோ என்றுதொழில் செய்து பொருள் ஈட்டியவர்கள், நிலைதடுமாறும் சூழ்நிலையைச் சந்திப்பதும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிக்கு தொடர்ந்து செல்ல இயலாத நிலை, குடும்பங்களுக்குள் ஒற்றுமைக் குறைவு, எந்தச் செயலைச் செய்தாலும் தாமதம், தடை இதுபோன்ற நிலைமை…

0 comments

பஞ்ச நந்திகள்

நந்தி அனுமதி கிடைத்தால் தான் ஈசன் அருளைப் பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. நந்தி’ என்றால் ‘ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர்’ என்று பொருள். பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு பெரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். போக நந்தி: ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன்,…

0 comments

எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுவது ஏன்?

கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடும் போது எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றுவது இயல்பான விடயமாக இருக்கலாம். ஆனால் அதற்கான காரணம் என்ன? எந்த நாளில் விளக்கேற்றினால் அதற்கான பலனை பெறலாம் என்பது தெரியுமா? எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றுவது எப்படி? தோல் மெல்லியதாக உள்ள எலுமிச்சை பழத்தினை எடுத்து கொண்டு அதன் தோலை நெகிழ்வாக உருட்டி செங்குத்தாக சரிபாதியாக வெட்டி, சாற்றினைப் பிழிந்து கொள்ள வேண்டும். பின் பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே…

0 comments

கணபதி ஹோமத்தின் சிறப்பு

ஹோமங்களில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது. பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில் நடத்துவது நன்மை தரும். மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. வினைகளை தீர்க்கக் கூடியவர் விநாயகர் உருவமற்றவர். மஞ்சளைப் பிடித்து வைத்து கூட விநாயகராக வணங்கலாம். பழங்காலத்தில் பசும் சாணத்தை விநாயகராகப் பிடித்து வழிபட்டுள்ளனர். பசுவின் சாணத்தை தேவப்பிரசாதம் என்று பழைய நூல்கள் கூறுகின்றன. நிலத்தில் படாமல் புல், செடி,…

0 comments

புனித யாத்திரை சென்றால் பாவம் நீங்குமா?

தீர்த்த யாத்திரை சென்று வந்தால் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்று சொல்வார்கள். புனித யாத்திரை சென்றால் பாவம் நீங்குமா? என்பதற்கான விடையை இந்த ஆன்மிக கதை மூலம் பார்க்கலாம். ஒருமுறை கோரா கும்பாரர் என்ற ஞானியிடம், அவரது அன்பர்கள் சிலர் தீர்த்த யாத்திரைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால் அந்த ஞானி, ‘நான் வருவதற்கு சரியான விதி விதிக்கப்படவில்லை. ஆதலால் நீங்கள் போய் வாருங்கள்’ என்று கூறினார்….

0 comments

விநாயகர் அருள் பெற 11 வகையான விரதங்கள்

விநாயகர் அருள் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். 1. வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம். 2. செவ்வாய் விரதம் – ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும். 3. சதுர்த்தி விரதம் – பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும். 4. குமாரசஷ்டி…

0 comments